நடிகர் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் மே 1 அன்று வெளியாக இருக்கிறது.  இப்படத்தை புரோமோட் செய்ய நேற்று ( 26-04-2025) ஹைதராபாத்திற்கு சென்று இருந்தார்.

By Kalyani Pandiyan S
Apr 27, 2025

Hindustan Times
Tamil

மே 1 அன்று ரெட்ரோ படம் ரிலீஸ் ஆகிறது. இம்முறை நிச்சயம் உங்களை நான் திருப்தி அடையச் செய்வேன் என்று நினைக்கிறேன். நான் அடுத்ததாக வெங்கட் அட்லூரியின் படத்தில் நடிக்கிறேன். அதை இங்கு மகிழ்ச்சியாக தெரிவித்துக் கொள்கிறேன். மே மாதத்திலிருந்து படப்பிடிப்பை தொடங்க இருக்கிறோம்.

நான் அடுத்ததாக வெங்கட் அட்லூரியின் படத்தில் நடிக்கிறேன். அதை இங்கு மகிழ்ச்சியாக தெரிவித்துக் கொள்கிறேன். மே மாதத்திலிருந்து படப்பிடிப்பை தொடங்க இருக்கிறோம்.

பாக்சிங் ரிங்கிற்குள் நீங்கள் கீழே விழுந்தால் தோல்வியாளனாக மாறிவிட மாட்டீர்கள். நீங்கள் மறுபடியும் எழ மறுத்தீர்கள் என்றால் மட்டுமே தோல்வியாளனாக மாறுவீர்கள். 

நாங்கள் தற்போது மீண்டும் எழுந்திருக்கிறோம். இந்த முறை வலுவான பஞ்ச் எங்களிடம் இருந்து வரும்.’ என்று பேசினார். 

முன்னதாக, சூர்யா நடிப்பில் இயக்குநர் சிவா இயக்கத்தில் வெளியான கங்குவா திரைப்படம் கடுமையான விமர்சனங்களைப் பெற்று படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்தப்படத்தை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி பார்த்துக்கொண்டிருக்கிறார் சூர்யா

இப்படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். 

ஆரோக்கியமான செரிமானத்திற்கு இந்த 9 காலை பழக்கங்களைப் பின்பற்றுங்கள்.

Image Credits : Adobe Stock