உடலுக்கு தேவையான அத்தியாவசிய தாதுக்களில் ஒன்றாக மெக்னீசியம் உள்ளது. அந்த வகையில் மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்த உணவுகள் எவை என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்
By Muthu Vinayagam Kosalairaman Jan 10, 2024
Hindustan Times Tamil
அடிக்கடி உடல் சோர்வு அடைவது, தசை இழுப்பு, அசௌகரிய உணர்வு ஆகியவை உடலில் மெக்னீசியம் அளவு குறைந்திருப்பதற்கான சிக்னலாக உள்ளது. இது உடலின் சமநிலை மற்றும் ஆற்றலை பாதிக்கிறது
உடலுக்கு தேவையான அளவு மெக்னீசியத்தை உடனடியாக வழங்கி ஆற்றலை மீட்டெடுக்க சில உணவுகள் உள்ளன
பாதாம் கொட்டைகள் உடலில் மெக்னீசியம் அளவு அதிகரிக்க செய்கிறது. இதனை அப்படியே, சாலட்களில் கலந்து அல்லது பேக் செய்து சாப்பிடலாம்
பாதாம் போன்று மற்றொரு கொட்டை வகையான முந்திரியும் உடலுக்கு தேவையான மெக்னீசியத்தை தருவதற்கான ஆதாரமாக உள்ளது. ஒரு கையளவு முந்திரியை அப்படியே சாப்பிட்டால் உடலில் மெக்னீசியம் அளவானது அதிகரிக்கலாம்
பழங்களில் வாழைப்பழம் உடலுக்கு தேவையான அளவு மெக்னீசியத்தை வழங்குகிறது. இது இருதய செயல்பாடு, தசை சுருக்கம் ஆகியவற்ற தடுக்கிறது. வாழைப்பழத்தை ஸ்நாக்ஸாகவும், பல்வேறு உணவுகளுடன் சேர்த்தும் சாப்பிடலாம்
பசலை கீரை ஊட்டச்சத்துகளுடன், மெக்னீசியத்தின் ஆதாரமாகவும் திகழ்கிறது. இதை சாலட் ஆக தயார் செய்து, மிக்ஸில் அரைத்து ஸ்மூத்தி போன்றும், இதர உணவுகளின் சைடு டிஷ் ஆகவும் சாப்பிடலாம்
சோயா பாலில் தயார் செய்யப்படும் டோஃபு தாவரம் சார்ந்த புரதமாக இருந்து வருகிறது. அத்துடன் மெக்னீசியத்தின் ஆதாரமாகவும் திகழும் இதனை ப்ரை, குழம்பாக தயார் செய்து சாப்பிடலாம்
Radish : யார் முள்ளங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் தெரியுமா!