தைராய்டு ஆரோக்கியத்தை ஆதரிக்கும் சுவையான சூப்பர்ஃபுட்கள்
PINTEREST
By Marimuthu M Dec 28, 2024
Hindustan Times Tamil
தைராய்டு சுரப்பி ஆற்றல், வளர்சிதை மாற்றம், உடல் வெப்பநிலை, மனநிலை, இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் முக்கிய ஹார்மோன்களை உருவாக்குகிறது.
PINTEREST, ST LUKE'S HEALTH
கடற்பாசி - கெல்ப், நோரி மற்றும் வகாமே போன்ற கடற்பாசி வகைகளில் இயற்கையாகவே அயோடின் அதிகமாக உள்ளது, இது ஆரோக்கியமான தைராய்டு செயல்பாட்டிற்கு இன்றியமையாத உணவாகும்.
PEXELS
நட்ஸ்: பிரேசில் நட்ஸ், மக்காடமியா நட்ஸ் மற்றும் ஹேசல்நட்ஸ் போன்ற நட்ஸ்களில் செலினியம் அதிகம் உள்ளது. இது ஆரோக்கியமான தைராய்டு செயல்பாட்டை பராமரிக்க முக்கியமான ஊட்டச்சத்து ஆகும்.
PIXABAY
திருக்கை, கட்லா போன்ற மீன்கள் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் செலினியம் ஆகியவற்றின் சிறந்த ஆதாரங்கள் ஆகும். இவை இரண்டும் தைராய்டு வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன
பால் பொருட்கள்: தயிர், பால் மற்றும் ஐஸ்கிரீம் போன்ற பால் பொருட்களில் அயோடின் நிறைந்துள்ளது. இது தைராய்டு ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத ஊட்டச்சத்து ஆகும். இது சுரப்பி விரிவாக்கத்தைத் தடுக்க உதவுகிறது. இது கோய்ட்டர் என அழைக்கப்படுகிறது
PEXELS
முட்டைகள்: முழு முட்டைகளும் செலினியம் மற்றும் அயோடினின் சிறந்த மூலமாகும். இது தைராய்டு ஆரோக்கியத்திற்கு அவசியம்.
PEXELS
நெல்லிக்காயில் தைராய்டு ஆரோக்கியத்திற்குத் தேவையான ஃபிளாவனாய்டுகள், பாலிபினால்கள் உள்ளன.
பழங்களை ஜூஸாக பருகினாலும், அப்படிய சாப்பிட்டாலும் என்னென்ன நன்மைகள் பெறலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்