இயற்கையாகவே தலை முடி வளர்ச்சிக்கு உதவி புரியும் சூப்பர் உணவுகள் எவை என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்
By Muthu Vinayagam Kosalairaman Jan 21, 2024
Hindustan Times Tamil
அதிக அளவில் புரதமும், பயோடினும் கொண்டிருக்கும் முட்டை தலைமுடி வளர்ச்சிக்கு அத்தியாவசியமானதாக உள்ளது. புரதம் மயிர்கால்களுக்கு ஆதரவு அளிப்பதுடன், பையோடிந் கெராடின் உற்பத்தியை அதிகரிக்கிறது
வைட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகளை கொண்டிருக்கும் பெர்ரிக்கள் மயிர் கால்களுக்கு பாதுகாப்பு அரணாக திகழ்கிறது
அத்தியாவசிய ஊட்டச்சத்துகளான போலேட், இரும்பு, வைட்டமின் ஏ, சி போன்றவை நிறைந்திருக்கும் பசலை கீரை தலைமுடி வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது
சாலமன், கானாங் கெளுத்தி போன்ற கொழுப்பு சத்து நிறைந்த மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், புரதம், செலினியம், வைட்டமின் டி3, பி வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இவை தலைமுடி வளர்ச்சியை ஊக்கப்படுத்துகிறது
பீட்டா கரோடின் சேர்மானம் நிறைந்திருக்கும் சீனிக்கிழங்கு அதை வைட்டமின் ஏ ஆக உருமாற்றுகிறது. இது தலைமுடி வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கிறது
சுவை மிகுந்த அவகோடா பழங்களில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. நாள்தோறும் உடலுக்கு தேவைப்படும் வைட்டமின் ஈ சத்துக்களில் 28 சதவீதத்தை கொண்டுள்ளது. இவை தலை முடி வளர்ச்சிக்கு பங்களிப்பு தருகிறது
பாதாம், வால்நாட் போன்ற கொட்டை வகைகளில் வைட்டமின் ஈ, பி வைட்டமின்கள், துத்தநாகம் உடலுக்கு தேவையான அடிப்படை கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளன. இவை தலை முடி வளர்ச்சிக்கு உதவுகிறது
வைட்டமின் ஈ, துத்தநாகம், செலினியம் நிறைந்திருக்கும் சூரிய்காந்தி விதைகள் தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகிறது. 28 கிராம்கள் சூர்யகாந்தி விதைகள் உங்களது வைட்டமின் ஈ தேவையை பூர்த்தி செய்கிறது
வைட்டமின் சி சத்துக்களை கொண்டிருக்கும் இனிப்பு குடைமிளகாயில் இடம்பிடித்திருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகிறது. கொலஜன் உற்பத்தியை அதிகரித்து முடிகளை பலப்படுத்த உதவுகிறது
சிப்பிக்களில் துத்தநாகம் உள்பட தாதுக்கள் இருப்பதால் தலை முடி வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிக்கிறது