வெயிலுக்கு வீட்டில் A.C. மாட்டியும் கூலிங் போதலயா.. சரியாக என்ன செய்யலாம்..!

By Pandeeswari Gurusamy
Apr 12, 2025

Hindustan Times
Tamil

அறையின் அளவுக்கு ஏற்ப திறனுள்ள ஏ.சி. தானா என்று உறுதி செய்யவும். நூறு சதுரடி பரப்பளவு வரை ஒரு டன் திறன் வரை பொருத்தலாம்.

A C. யில் வெப்ப அளவு 23 முதல் 25 வரை வைக்கலாம். அதிகம் அல்லது மிகவும் குறைவான அளவுகள் வைக்க வேண்டாம். மின்சாரமும் கூடுதல் செலவு ஆகும்.

பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை இயந்திரத்தின் மேற்பகுதியில் உள்ள பில்ட்டர்களை கழட்டி சுத்தம் செய்து மாட்டலாம். இயந்திரத்தை கதவுக்கு நேராக இல்லாமலும் அறைக்கு மையமாக இருக்கும் படி பொருத்தவும்.

இயந்திரத்தின் பிளேடுகள் ஒரே இடத்தில் நிலைநிறுத்தாமல் ஸ்விங் மோடில் வைக்க குளிர்ச்சி அறையில் முழுமையாக பரவும். 

அறையின் கதவு மற்றும் ஜன்னல்கள் முறையாக மூடப்பட்டுள்ளதை உறுதி செய்யவும்.

மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை முழுமையாக சர்வீஸ் செய்ய வேண்டும். கேஸ் அளவு சரியாக பராமரிக்க வேண்டும். குளிர்காலத்தில் கூட தினமும் பதினைந்து நிமிடங்களாவது பயன்படுத்துங்கள்.

அதிக வெப்பம் உள்ள கோடைக்காலங்களில் அறையை பயன்படுத்துவதற்கு பத்து நிமிடம் முன்பு இயந்திரத்தை ஓட விடவும்.‌

இந்த மாதிரி விசயங்களை பின்பற்றினால் மகிழ்ச்சியாக அதிக செலவு இல்லாமல் கோடையை நிம்மதியாக கடந்து விடலாம்.

கொங்கு நாட்டு ஸ்டைலில் கருவாட்டு குழம்பு செய்வது எப்படி?