எல்லோருக்குமான சுடச் சுட சுவையும் மணமும் நிறைந்த சுக்கு மல்லி காஃபி செய்யலாமா!

By Pandeeswari Gurusamy
May 06, 2025

Hindustan Times
Tamil

சுக்கு மல்லி காஃபி என்றாலே  ஆரோக்கியத்துக்கு ஏற்ற காஃபி.... உங்களுக்கு பிடித்த மாதிரி ருசித்து குடிக்க இந்த ரெசிப்பியை ஃபாலோ பண்ணுங்க.

இந்த ரெசிபியின் பிரதான பொருட்கள் உலர்ந்த சுக்கு நாற்பது கிராம், தனியா மல்லி முப்பது கிராம், ஐந்து கிராம் மிளகு போதும்.

மேலே சொன்ன மூன்று பொருட்களை நன்றாக உலர்ந்த மிக்ஸியில் போட்டு பொடியாக அரைத்து எடுத்து காற்று புகாத பாட்டிலில் அடைத்துக் கொள்ள வேண்டும்.

உங்களுக்கு காஃபி தேவைப்படும் போது அரை லிட்டர் தண்ணீரை பாத்திரத்தில் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.

தண்ணீர் நன்கு கொதித்ததும் தேவையான நபர்கள் எண்ணிக்கை அடிப்படையில் அரைத்து வைத்த பொடியை டீஸ்பூன் அளவில் (ஒரு நபருக்கு ஒரு ஸ்பூன்) போட்டு கொதிக்க விடவும்.

மல்லி வாசமும் சுக்கு, மிளகு காரமும் நன்றாக இறங்கி வரும் வரை கொதிக்க விடவும்.

தேவையான அளவு கொதித்ததும் இறக்கி தேவையான அளவு நாட்டு சர்க்கரை சேர்த்து எல்லோருக்கும் சுவைக்க சுக்கு மல்லி காஃபி யை பரிமாறுங்கள்.

நாட்டு சர்க்கரை போடுவதால் இனிப்புக்காக சேர்க்கும் சீனியை தவிர்க்கலாம். அதே சமயம் சர்க்கரைக்கு பதில் கருப்பட்டி சேர்த்தும் இந்த காபியை தயாரிக்கலாம். ருசி அட்டகாசமாக இருக்கும்.

ஆரோக்கியமான செரிமானத்திற்கு இந்த 9 காலை பழக்கங்களைப் பின்பற்றுங்கள்.

Image Credits : Adobe Stock