பிரபல நடிகையும், மணிரத்னத்தின் மனைவியுமான சுஹாசினி, மணிரத்னத்துடனான காதல் தருணங்கள் குறித்து இந்தியா கிளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு பேசி இருக்கிறார்.
By Kalyani Pandiyan S May 18, 2025
Hindustan Times Tamil
அதில் அவர் பேசும் போது, ‘எனக்கும் மணிரத்தினத்திற்கும் சரியான புரிதல் இருப்பது இசையில்தான். ஆம், இசைதான் எங்களை இணைக்கும் முக்கியமான விஷயம்.
கூட்டத்தில் எனக்கு பிடித்த ஏதாவது ஒரு பாடல் ஒலிக்கிறது என்றால், மணிரத்னம் என்னை தேடி கண்டுபிடித்து நான் உனக்கு பிடித்த பாடலை கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்பதை வெளிப்படுத்தும் விதமாக தலையை ஆட்டுவார்.
அதேபோல, அவருக்கு பிடித்த பாடல் ஒலித்தது என்றால், நானும் அவரை தேடிப்பிடித்து உங்களுக்கு பிடித்த பாடலை நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்பதை வெளிப்படுத்துவேன். அது எங்களுக்குள் மிக அழகான ஒரு மொமெண்டாக இருக்கும்
மணிரத்னம் எல்லா விஷயத்தையும் மிகவும் ஈசியாக எடுத்துக் கொள்வார். நான் அவரிடம் சண்டை போட வேண்டும் என்று சென்றேன் என்றால், அந்த விஷயத்தை அவர் காமெடியாக மாத்தி விடுவார்.
எங்கள் தலையில் இடி விழக்கூடிய விஷயமாக இருந்தாலும் கூட, நாங்கள் அதை காமெடியாக மாற்றிய தருணங்களும் உண்டு.
கணவரை அடுத்தவர்களிடம் மிக மிக அதிகமாக பெருமை பேசவும் கூடாது என்று நினைக்கிறேன். இந்த இரண்டு விஷயங்களை நான் எப்பொழுதும் செய்ய மாட்டேன். நம்முடைய துணையானவர் நம்முடைய பக்கத்தில் இருக்கிறார் நம்முடைய எல்லா முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருக்கிறது என்ற நம்பிக்கையை கொடுக்க வேண்டும். அந்த நம்பிக்கையானது என் மீது அவருக்கும், அவர் மீது எனக்கும் நன்றாகவே இருக்கிறது.
மணிரத்னம் என்னுடைய வேலைகளில் பெரிதாக தலையிடுவது கிடையாது; காரணம் என்னவென்றால் அவருடைய வேலையில் அவர் அப்படியே மூழ்கி போயிருக்கிறார். காரணம், அடுத்தவர்கள் என்ன செய்கிறார்கள் என்று மிக மிக அரிதாகத்தான் அவர் பார்ப்பார்.
அந்த சுதந்திரத்தை நான் அவருக்கு கொடுத்திருக்கிறேன். அவருடைய வேலைகளில் அவர் முழு ஈடுபாட்டுடன் ஈடுபடுவதற்கான முழுமையான இடத்தை நான் அவருக்கு கொடுத்திருக்கிறேன்.’ என்று பேசினார்.