மேஷம் முதல் மீனம் வரை! பணம் கொட்டும் ஸ்திர மகாலட்சுமி யோகம் யாருக்கு? ஜோதிடம் சொல்லும் ரகசியம்!

By Kathiravan V
Jun 27, 2024

Hindustan Times
Tamil

ஜோதிடத்தில் யோகம் என்ற சொல்லு சேர்க்கை என்று பொருள்படுகிறது. ஒருவருடைய ஜாதகத்தில் கிரகங்களின் நகர்வு, பார்வை, ஆட்சி, உச்சம், நீசம் உள்ளிட்டவைகளை வைத்து பல்வேறு யோகங்கள் ஏற்படுகின்றன. 

ராஜயோகம், விபரீத ராஜயோகம், கஜகேசரி யோகம், பாக்கிய யோகம், ஜோதி யோகம் உள்ளிட்ட பல்வேறு யோகங்கள் உள்ளன.

’ஸ்திர லட்சுமி யோகம்’ என்பதற்கு நீண்ட கால நிலைத்த லட்சுமி யோகம் என்று பொருள் ஆகும்.

நிலைத்த புகழ், நிலைத்த செல்வம், நிலைத்த நல்ல குடும்பம், நிலைத்த செல்வாக்கு, நிலைத்த நன்மதிப்பு, நிலைத்த கல்வி, நீடித்த உழைப்பு, நீடித்த தொழில் வலு, நீடித்த ஆயுள் ஆகிய சுபிட்சங்களை தரக்கூடிய யோகமாக இந்த யோகம் உள்ளது. 

ஜோதிடத்தில் லட்சுமி ஸ்தானங்களில் 9ஆம் இடமான பாக்கிய ஸ்தானத்திற்கு முக்கியத்துவம் உள்ளது.  எந்த ஒரு லக்னத்திற்கும் 9ஆம் அதிபதியும், லக்னாதிபதியும் ஆட்சி, உச்சம் பெற்ற நிலையில் இருந்தால் நிலைத்த லட்சுமி யோகம் உண்டாகும். இது முதல் நிலை ஸ்திர லட்சுமி யோகம் என அழைக்கப்படுகின்றது.

9ஆம் அதிபதியோ அல்லது லக்னாதிபதியோ யாராவது ஒருவர் ஆட்சி அல்லது, உச்சம் அடைந்துவிட்ட நிலையில், மற்றொருவர் அவருக்கு கேந்திரத்திலோ, லக்னாதிபதி உடன் இணைந்த நிலையிலோ, அல்லது லக்னத்தில் ஸ்திர வீடுகளில் வர்கோத்தமத்தில் இருந்தாலும் இந்த ஸ்திர லட்சுமி யோகம் உண்டாகிறது என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

உங்கள் பாக்கியாதிபதி வலுப்பெற்ற நிலையில் சுக்கிரன் உடன் இணைந்த நிலையில் இருந்தாலும் ஸ்திர லட்சுமி யோகம் உண்டாகும்.

உங்க குழந்தைகளின் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்க என்ன செய்ய வேண்டும் பாருங்க!

pixabay