கண் திருஷ்டியை விரட்டும் சக்தி வாய்ந்த எலுமிச்சை பரிகாரங்கள்!
Canva
By Pandeeswari Gurusamy Mar 25, 2025
Hindustan Times Tamil
எலுமிச்சை அதன் சத்துக்களால் ஆரோக்கியத்திற்கு பெரிதும் பயன்படுகிறது. அதேபோல் பல்வேறு ஜோதிட பரிகாரங்களுக்கும் எலுமிச்சை தொன்று தொட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
Pixabay
வீட்டு வாசலில் மிளகாய் மற்றும் எலுமிச்சையை கட்டுவது கண் திருஷ்டி நீங்கி நேர்ம்றை ஆற்றலை கொடுக்கும் என்பது நம்பிக்கை.
Pixabay
எலுமிச்சை பழத்தில் 4 கிராம்புகளை வைத்து அதை அனுமன் கோயிலுக்கு கொண்டு சென்று படைத்து அனுமனை மனதார வேண்டிக்கொள்ள வேண்டும். இப்படி செய்வதால் நீங்க நினைத்த காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கை
Pixabay
கண்திருஷ்டி நீங்க எலுமிச்சையை தலை முதல் கால் வரை 7 முறை சுற்ற வேண்டும். பின்னர் அந்த பழத்தை 4 துண்டுகளாக ஒதுக்கு புறமான இடத்தில் எறியலாம். இது நல்ல பலன் தரும் என்பது நம்பிக்கை.
Pixabay
வியாபாரத்தில் தொடர்ந்து சிக்கல் இருக்கும் பட்சத்தில் முன்னேற்றம் பெற 5 எலுமிச்சை பழங்கை வெட்டி ஞாயிறன்று பணியிடத்தில் வைக்க வேண்டும். கருப்பு மிளகு மற்றும் ஒரு கைபிடி மஞ்சள் கடுகையும் சேர்க்க வேண்டும். இதை மறுநாள் எடுத்து தனி இடத்தில் ஒதுக்கி வைத்து விடுங்கள்.
Pixabay
எலுமிச்சையை எடுத்து சென்று 7 முறை தன்னை தானே சுற்றி இரண்டு பகுதியாக நறுக்கி ஒரு பகுதியை முன்புறமும் ஒரு பகுதியை பின்புறமும் எறிந்தால் நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
Pixabay
உங்கள் உழைப்புக்கு ஏற்ற வெற்றி கிடைக்க வில்லை என்று உணர்ந்தால் எலுமிச்சையை நள்ளிரவில் நான்காக வெட்டி கடவுளை வணங்கி 4 திசையும் எறிவது பலன் தரும் என்பது நம்பிக்கை
Pixabay
பொறுப்பு துறப்பு : இந்த தகவல் நம்பிக்கைகள், வேதங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. தகவல் நோக்கங்களுக்கு மட்டுமே. எந்தவொரு தகவலையும் ஏற்றுக்கொள்வதற்கு முன் நிபுணர்களை அணுகவும்
Pixabay
மஞ்சள் மற்றும் இஞ்சி தேநீர் குடிப்பதால் கிடைக்கும் அற்புதமான ஆரோக்கிய நன்மைகள்!