திமுக அமைச்சர் சேகர்பாபுவின் பெயரை குறிப்பிடாமல் அவரது செயல்பாடுகளை சுட்டிக்காட்டி சென்னை மாவட்ட அதிமுக செயலாளர்களை ஈபிஎஸ் விமர்சித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

By Kathiravan V
Mar 09, 2025

Hindustan Times
Tamil

சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் காணொளிக் காட்சி மூலம் (Video Conference) மூலம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதிமுகவில் அமைப்பு ரீதியாக செயல்படும் 82 மாவட்டங்களுக்கான மாவட்டப் பொறுப்பாளர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட நிர்வாகிகளிடையே அலோசனை மேற்கொண்டார். கட்சி வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்துவது, 2026 சட்டமன்ற தேர்தல் பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது இக்கூட்டதில் ஆலோசிக்கப்பட்டது.

வடசென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்களாக உள்ள பாலகங்கா மற்றும் வெங்கடேஷ் பாபுவின் செயல்பாடுகள் மீது அதிருப்தி அடைந்த ஈபிஎஸ், அமைச்சர் சேகர்பாபுவின் பெயரை குறிப்பிடாமல் பாராட்டியதாக தகவல் வெளியாகி உள்ளது. “உங்கள் பகுதியில் ஒரு அமைச்சர் இருக்காரு, அவரு என்னென்ன செய்யராருன்னு தெரியும் இல்ல; அடிக்கடி மக்கள் நலத்திட்டங்களை கொடுக்குறார், அது போல் நீங்கள் ஏன் செய்யவில்லை. என ஈபிஎஸ் பேசியதாக கூறப்படுகிறது.

கொளத்தூர் தொகுதியை வென்றாலே, ஒட்டுமொத்த தமிழ்நாட்டை வென்றதற்கு சமம் என்றும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் திமுகவுக்கு சவால்விடும் வகையில் அதிமுக செயல்பட வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒருங்கிணைந்து செயல்படாததால்தான் அதிமுகவின் கோட்டையாக இருந்த விருதுநகரில் வெற்றி வாய்ப்பை இழந்து உள்ளோம்.  நிர்வாகிகள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திர பாலாஜி, மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் பெயரை குறிப்பிடமால் ஈபிஎஸ் விமர்சனம் செய்து உள்ளாராம்.

கூட்டணி விவகாரம் குறித்து பேசிய ஈபிஎஸ், கூட்டணி குறித்து பொதுச்செயலாளர் பார்த்துக் கொள்வார் என்று சொல்லுங்கள். ஊடங்களிடம் யாருடன் கூட்டணி, யாருடன் கூட்டணி கிடையாது என்பது குறித்து பேச வேண்டாம் என ஈபிஎஸ் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

நம்மிடம் கூட்டணி கேட்டு பலர் கெஞ்சுகிறார்கள். நம்மை யாரும் மிரட்டி கூட்டணிக்கு பணியவைக்க முடியாது. நமக்கு ஒரே எதிரி திமுகதான், திமுகவை வீழ்த்த யாருடனும் கூட்டணி வைக்கலாம் என கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

பால் இல்லாமலே எலும்புகளை வலுவாக்கணுமா? கால்சியம் சத்து நிறைந்த இந்த உணவுகளை ட்ரை பண்ணுங்க!