விவாகரத்து இல்லாத வாழ்க்கை வாழ சில டிப்ஸ்!

By Marimuthu M
Mar 26, 2024

Hindustan Times
Tamil

ரிலேஷன்ஷிப்பில் மிக முக்கியம் மரியாதை. மரியாதை குறைவதாக இருந்தால் இருவரும் மனம்விட்டுப் பேசுங்கள். 

கேரியர் மற்றும் பெர்ஷனல் விஷயங்களை கொஞ்சம் டைம் எடுத்து பேசுங்கள். ஒருவருக்குப் பிடித்ததை மற்றொருவர் ஏற்றுக்கொள்ளப் பழகுங்கள்.

ஒன்றாக நடைபயணம் செய்வது, திருமண ஆல்பம் பார்ப்பது, சர்ப்ரைஸ் செய்வது ஆகியவை ஒருவர் மீது ஒருவருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும்

வேலைப் பளுவின் காரணமாக,  இணையால் உங்களுக்குப் பிடித்ததை செய்யமுடிய வில்லையென்றால், அதைப் புரிந்துகொள்ள முயற்சியுங்கள். அவர் உங்களுக்காக ஏதாவது தன்னால் முடிந்த Effort போட்டாரா என்பதுதான் முக்கியம்.

உங்கள் பார்ட்னர் உங்களிடம் அளித்த உறுதிமொழியை ஒருவேளை மறந்துவிட்டு, நீங்கள் நினைவு படுத்தினால், அதை ஆமோதித்து, அதற்கு பதில் சொல்கிறார் என்றால் அங்கே ஹெல்தியான ரிலேஷன்ஷிப் தான் இருக்கிறது. 

உங்கள் இல்லறத்  துணையுடனான பிரச்னைகளை தயவு செய்து நண்பர்களிடம் ஷேர் செய்யாதீர்கள். குறிப்பாக, தாம்பத்திய  வாழ்க்கையை மற்றவர்களிடம் சொல்லவே கூடாது

உங்கள் பார்ட்னர் செய்த தவறுகளை மறக்கவும் மன்னிக்கவும் கற்றுக் கொண்டால், வாழ்க்கை வசமாகும்

நீங்கள் நன்றாக சம்பாதித்தாலும் பட்ஜெட் போட்டு, ஆடம்பரங்களைத் தவிர்த்து, பணத்தின் மதிப்பினைக் கூறி வாழ்க்கையை வாழுங்கள்.  இல்லையென்றால், பிற்காலத்தில் சரியான வாய்ப்பு கிடைக்காதபோது வருந்துவீர்கள்.

நியூசிலாந்து பவர் ஹிட்டர் பிரண்டன் மெக்கல்லமின் 10 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் ஜெய்ஸ்வால்