நீளமான நகமுள்ளவர்கள் அடிக்கடி முகத்தில் கை வைப்பது லேசான பருக்களை கிள்ளி விடுவது போன்றவை பருக்களை அதிகமாக்கும். இந்த பழக்க வழக்கங்களை தவிர்ப்பது நல்லது 

Pixabay

By Suriyakumar Jayabalan
Mar 28, 2025

Hindustan Times
Tamil

நமது உடலில் நீர்ச்சத்து குறைந்தால் முகப்பருக்கள் அதிகமாகும். அதனால் தினமும் நிறைய தண்ணீர் குடிப்பது சருமத்திற்கு நல்லது என கூறப்படுகிறது. 

Pixabay

நட்ஸ் வகைகள், கீரைகள், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட சரிவிகித உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது ஜீரண மண்டலம் சரியான முறையில் செயல்படும்பொழுது முகப்பருக்கள் வராது எனக் கூறப்படுகிறது 

Pixabay

உடல் தாங்கும் அளவிற்கு மிதமான வெந்நீரில் குளிப்பது நல்லது. புகை வரும் அளவிற்கு சூடான வெந்நீர் குழுக்கும் பழக்கம் இருந்தால் அது சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்

Pixabay

தினமும் உடற்பயிற்சி செய்வது நல்லது வியர்வை உடற்பயிற்சியின் போது அதிகம் வெளிப்படும். வேர்வை சருமத்தின் தலைகளின் வழியாக வெளிவந்து சருமத்தை சுத்தமாக்கும் என கூறப்படுகிறது

Pixabay

முகத்திற்கு மஞ்சள் பூசுவதை தவிர்ப்பது நல்லது தற்போது மஞ்சள் தூள் ரசாயன கலப்பு அதிகம் இருக்கின்ற காரணத்தினால் அது சருமத்திற்கு தொல்லைகளை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. நாட்டு மருந்து கடைகளில் மஞ்சள் கிழங்கு வாங்கி அரைத்து பயன்படுத்துவது சருமத்தை பாதுகாக்கும் என கூறப்படுகிறது 

Pixabay

தற்போது வெளியே விற்கப்படும் துரித உணவுகள் மற்றும் ஜங்க் உணவு வகைகளை பெரும்பாலானோர் சாப்பிடுகிறார்கள். அதனால் சீரற்ற கழிவு அகற்றும், ஜீரண கோளாறு உள்ளிட்டவைகள் ஏற்படுவதால் முகப்பருக்கள் அதிகமாக உருவாகும் என கூறப்படுகிறது.

Pixabay

பொடுகு தலையில் கையால் சொறிந்து விட்டு அதனை அப்படியே முகத்தில் வைப்பது முகப்பருக்களை பெருக செய்யும் எனக் கூறப்படுகிறது. இந்த பழக்கவழக்கங்களை தவிர்த்தால் சருமம் நன்றாக இருக்கும் என கூறப்படுகிறது.

Pixabay

பொறுப்பு துறப்பு: இவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதன் உண்மைத்தன்மைக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் எந்த வகையிலும் பொறுப்பேற்காது. துறை வல்லுனர்களைக் கலந்தாலோசிப்பது முக்கியம்.

Pixabay

எளிமையான வெயிலுக்கு உகந்த மோர்க் குழம்பு செய்முறை எப்படி என தெரியுமா?