இரவில் நன்கு தூங்க சில வழிமுறைகள்!

By Marimuthu M
Aug 11, 2024

Hindustan Times
Tamil

நண்பகல் நேரத்தில் தூங்காதீர்கள். அப்படி தூங்காமல் இருக்கும்போது உடலில் அடினோசின் அளவு அதிகரித்து இரவில் நன்கு தூக்கம் வரும்

உங்கள் படுக்கையில் நீங்கள் தூங்கும் பணியை மட்டுமே செய்யவேண்டும். டிவி பார்க்கவோ, படிக்கவோ கூடாது

 உங்கள் படுக்கையறை இருட்டாகவும் அமைதியாகவும் இருக்கவேண்டும்

தூங்குவதற்கு முன் சிறிது நேரம் தியானம், வெதுவெதுப்பான குளியல் ஆகியவற்றை மேற்கொள்ளலாம்

இரவில் அதிகமான அளவு உணவு மற்றும் நீர் எடுப்பதைத் தடுத்து, மிதமான அளவு நீர் மற்றும் உணவை எடுத்துக்கொள்ளவேண்டும்

தூங்குவதற்கு குறைந்தது 4 மணிநேரத்திற்கு முன் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, யோகா ஆகியவற்றை செய்தால் சிறப்பான தூக்கத்தைப் பெறலாம்

தூங்குவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன் உங்கள் செல்போன், டிவி, லேப்டாப் ஆகியவற்றைப் பார்ப்பது நிறுத்தவும். அப்படி நிறுத்தினால் நல்ல தூக்கத்தைப் பெறலாம். 

செப்டம்பர் 12-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்