புகுந்த வீட்டுக்குள் செல்லும்போது அங்குள்ளவர்களை உடனடியாக புரிந்துகொள்ள
முடியாது. பொறுமையுடன் இருந்து விட்டுப் பிடியுங்கள்.
உங்கள் மாமியார் கோபக்காரியாக இருந்தாலும் அவரையும் உங்கள் தாய் போல் நடத்துங்கள். உங்கள் மீதான வெறுப்பு மெல்ல குறையும்.
மாமியார் ஃப்ரீயாக இருக்கும்போது அவரிடம் மெல்ல அவர் சந்தித்த கஷ்ட நஷ்டங்கள் பற்றி கேளுங்கள். உங்கள் மீது அவர்களுக்கு ஒரு ஈர்ப்பு வரும்.
உங்கள் மாமியார் மட்டுமின்றி, மாமனார், நெருங்கிய சொந்தங்கள் அனைவரிடமும் அக்கறையுடன் இருங்கள். அவர்களுடைய நல்லது - கெட்டதுகளில் பங்கெடுங்கள்.
உங்கள் மாமியாருக்கோ, மாமனாருக்கோ உடல்நிலை சரியில்லை என்றால் எந்தவொரு ஈகோவும் பார்க்காமல், உங்கள் குழந்தைப் போல் பார்த்துக்
கொள்ளுங்கள்.
உங்களது மாமியார், உங்களை விட வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர். எனவே, அவர்கள் கூறும் அறிவுரை உங்களுக்கு எரிச்சலாக இருந்தாலும் அவர்களது பார்வையில் இருந்து யோசித்தால், நல்லது என புரியும். எனவே, அதை எடுத்துக்
கொள்ளுங்கள். சிறு மாற்றங்கள் இருந்தால் அவர்களிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லுங்கள்.
நீங்கள் எப்படி ஒரு புது மருமகளோ, அவருக்கும் மாமியார் என்ற பொறுப்பு புதிது. உங்கள் வீட்டில் உள்ள உறுப்பினர்களுக்கு என்ன செய்வீர்களோ அதைச் செய்யுங்கள். தூக்கி கொண்டாட ஆரம்பித்து விடுவார்கள்.
அத்தையின் நல்ல பண்புகளை மருமகள் எடுத்துக்கூறி பாராட்டும்போது, அன்பும் பரிவும் மருமகள் மீது
மாமியாருக்கு ஏற்படுவது உறுதி.
2008இல் தொடங்கிய ஐபிஎல் போட்டிகளின் 18வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. பண மழை பொழியும் இந்த லீக்கில் தொடக்கம் முதல் தற்போது வரை சில வீரர்கள் விளையாடி வருகிறார்கள்