சமூக மதிப்புக்காக, வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைப்பதற்காக அடிக்கடி ஊர் சுற்றுவது (மன நிம்மதிக்குப் போனால் அதை விட்டுவிடலாம்)
குறைந்த தேவை இருந்தாலும் புதிய வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் அடிக்கடி வாங்க வேண்டும் என நினைக்கும் எண்ணம்.
வீட்டில் சமைத்து சாப்பிடாமல் வாரத்தின் இரண்டு, மூன்று நாட்கள் உணவகங்களில் உண்பது.
நிரந்தர சந்தோஷத்துக்குப் பணம் செலவழிக்காமல், பிரமாண்ட திருமணங்கள், குடும்ப விழாக்கள் போன்ற சமூக மதிப்பினை அதிகரிக்கும் பழக்கங்களுக்குச் செலவு செய்வதனால் குடும்பம் கடனில் மூழ்கும்.
வரவுக்குத் தகுந்த செலவு செய்யாமல், சேமிப்பினை மேற்கொள்ளாமல், அன்றைய சம்பாத்தியத்தை அன்றே செலவாக்கும் எண்ணம் கொண்டிருந்தால் குடும்பம் சீரழியும்.
சலூன்கள், பார்லர்கள் அடிக்கடி செல்வது, தேவைக்கு அதிகமாக ஆடைகள் இருப்பினும் விலையுயர்ந்த விலையில் சமூக மதிப்புக்காக வாங்க முயற்சிப்பது
தறிகெட்டுப்போன உணவு மற்றும் ஆடம்பர நுகர்வு கலாசாரத்தால் மருத்துவச் செலவுகள் அதிகரிப்பது.
கல்லீரல் கொழுப்பா? இந்த அறிகுறிகள் இருந்தால் உஷார்!