பஞ்சு போல சாஃப்டான ஆப்பம் செய்யலாமா.. ருசியா பக்குவமா எப்படி செய்வது பாருங்க!

Canva

By Pandeeswari Gurusamy
Mar 16, 2025

Hindustan Times
Tamil

தேவையான பொருட்கள் இட்லி அரிசி – 1 கப், பச்சரிசி – 1/2 கப், வெள்ளை அவல் – 1/2 கப் உளுந்து – கால்1/4 கப், வெந்தயம் – 1 ஸ்பூன், தேங்காய் துருவல் – 1/2 கப் 

Canva

இட்லி அரிசி, பச்சரிசி, வெள்ளை அவல், உளுந்து மற்றும் வெந்தயம் ஆகியவற்றை சரியான அளவில் எடுத்து நன்றாக 4 முதல் 5 மணி நேரங்கள் ஊற வைத்துவிடவேண்டும். பின்னர் அதை எடுத்து கழுவி வைத்துக்கொள்ளவேண்டும்.

Pixabay

தேங்காயை துருவிக்கொள்ளவேண்டும். ஓடு பகுதி இல்லாதபடி பார்த்து கொள்ள வேண்டும். முதலில் தேங்காயை சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவேண்டும்.  பின்னர் அதனுடன் சேர்த்து ஊறவைத்த அரிசி மற்றும் உளுந்தை சேர்த்து அரைக்க வேண்டும்

Pixabay

உங்களிடம் அவல் இல்லையென்றால் ஒரு கப் வடித்த சாதத்தை அரைக்கும்போது சேர்த்துக்கொள்ளலாம். வெந்தயம் கட்டாயம் சேர்க்க வேண்டும். 

Pixabay

மாவை நன்றாக அரைத்து எடுத்த பிறகு அதில் உப்பு, ஒரு ஸ்பூன் அளவு சர்க்கரை சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் கெட்டியாகவே கரைத்து மூடி வைக்க வேண்டும்.

Pixabay

8 மணி நேரம் நன்றாக புளிக்க வைத்த பிறகு ஆப்பம் ஊற்றலாம். மாவில் தேவையான அளவு தண்ணீர் கலந்து ஆப்ப சட்டியில் ஊற்றி நாம் அதை அனைத்து புறங்களிலும் சுழற்றிவிட்டுஎண்ணெய் விட்டு வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். 

Pixabay

தேவையான பொருட்கள் இட்லி அரிசி – 1 கப், பச்சரிசி – 1/2 கப், வெள்ளை அவல் – 1/2 கப் உளுந்து – கால்1/4 கப், வெந்தயம் – 1 ஸ்பூன், தேங்காய் துருவல் – 1/2 கப் 

8 மணி நேரம் நன்றாக புளிக்க வைத்த பிறகு ஆப்பம் ஊற்றலாம். மாவில் தேவையான அளவு தண்ணீர் கலந்து ஆப்ப சட்டியில் ஊற்றி நாம் அதை அனைத்து புறங்களிலும் சுழற்றி விட்டுஎண்ணெய் விட்டு வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். 

Canva

கணவன் - மனைவி ரிலேஷன்ஷிப் ஒற்றுமையாக இருக்க என்ன செய்யலாம்?