Strawberry Benefits:
இதய ஆரோக்கியம் முதல் எடை குறைப்பு வரை ஸ்ட்ராபெர்ரி சாப்பிடுவதால் எத்தனை நன்மைகள் பாருங்க
Pexels
By Pandeeswari Gurusamy Apr 05, 2024
Hindustan Times Tamil
ஸ்ட்ராபெர்ரி சாப்பிடுவது பல ஆரோக்கியமான நன்மைகளை உடலுக்கு தருகிறது. இது உடல் எடையை குறைக்க உதவுவது மட்டுமின்றி, ஆக்ஸிஜனின் அளவை அதிகபடுத்துகிறது.
Pexels
ஸ்ட்ராபெர்ரிகள் மற்ற உணவுப் பொருட்களை அலங்கரிப்பதற்காகவே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பழங்களில் தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இது உடலின் வலிமைக்கு பல வழிகளில் உதவுகிறது. ஸ்ட்ராபெர்ரிகள் உடலுக்கு என்ன செய்யும் என்று பார்ப்போம்.
Pexels
தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்திருப்பது மட்டுமல்லாமல், ஸ்ட்ராபெர்ரிகள் உடலில் ஆக்ஸிஜனை அதிகப்படுத்துகின்றன. மேலும் இது உடலின் வலியைப் போக்க உதவுகிறது.
Pexels
ஸ்ட்ராபெர்ரி இரத்த சர்க்கரையை குறைக்கவும், நமது உடலின் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இப்பழத்தில் கொழுப்பு, சோடியம் இல்லை என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள், இது குறைந்த கலோரி உள்ள பழமாகும்.
Pexels
ஸ்ட்ராபெர்ரிகள் உடல் எடையை அதிகரிக்க உதவும் என்ற கட்டுக்கதை மக்கள் மத்தியில் உலா வருகிறது. இந்த பெர்ரிகளில் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி உள்ளது என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர், இது விரைவாக உடல் எடையை குறைக்க உதவும் என்பதுதான் உண்மை.
Pexels
ஸ்ட்ராபெர்ரியில் வைட்டமின் சி உள்ளது, இது பல நோய்களைத் தடுக்க உதவுகிறது, ஸ்ட்ராபெர்ரியில் பல அழற்சி எதிர்ப்பு என்சைம்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன, அவை எடையைக் குறைக்கவும், செரிமானத்தை அதிகரிக்கவும் உதவுகின்றன.
pixa bay
ஸ்ட்ராபெர்ரிகளில் நார்ச்சத்துக்கள் உட்பட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் அதிக விழுக்காடு நீரும் உள்ளது. இது விரைவாக உடல் எடையை குறைக்க உதவுகிறது.