இலவங்க பட்டையில் இத்தனை நன்மைகளா?

pixa bay

By Pandeeswari Gurusamy
Jan 16, 2024

Hindustan Times
Tamil

பட்டை இந்திய சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு பொருள். குறிப்பாக அசைவ உணவு சமைப்பதில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது

pixa bay

இது வாசனைக்காக மட்டும் பயன்படுத்தப்படும் பொருள் மட்டுமல்ல, இது உடல் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது. எனவே, இதன் ஆரோக்கிய நன்மைகளுக்காக இது பல்வேறு உணவு பதார்த்தங்கள் செய்வதிலும் பயன்படுத்தப்படுகிறது. 

pixa bay

 ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உங்கள் உடலை பாதுகாக்கிறது. மேலும் இவை அழற்சி ஏற்படாமல் தடுக்கிறது. இது இயற்கையான ஃபுட் பிரசர்வேட்டிவாக செயல்படுகிறது.

pixa bay

உங்கள் உடலில் தொற்று ஏற்படாமல் தடுக்கிறது. திசுக்களை சரிசெய்கிறது.

pixa bay

இதய நோய்கள் வரும் ஆபத்தை தடுக்கிறது. நாளொன்றுக்கு ஒன்றரை கிராம் பட்டைப்பொடி சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

pixa bay

கொழுப்பு மற்றும் ரத்தச்சர்க்கரை அளவை குறைக்கிறது. உடலில் வளர்சிதை மாற்றத்துக்கு உதவுகிறது.

pixa bay

இன்சுலின், உடலில் வளர்சிதை மாற்றத்தை பராமரிக்க உதவும் ஹார்மோன். ரத்தச்சர்க்கரையை ரத்த ஓட்டத்தில் இருந்து செல்களுக்கு கடத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ரத்த சர்க்கரை அளவை குறைத்து, ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

pixa bay

பாக்டீரியாக்கள் வளர்வதையும் தடுக்கிறது. பற்களை பாதுகாத்து, வாய் துர்நாற்றத்தை போக்குகிறது.

pixa bay

 வைரஸ் தொற்றுகள் ஏற்படாமல் இருக்க உதவுகிறது. ஹெச்ஐவி வைரஸ்க்கு எதிராக செயல்படுகிறது. பட்டை இன்ஃபுளுயன்சா, டெங்கு மற்றும் கொசுக்களால் பரவும் மற்ற வைரஸ்களுக்கும் எதிராகவும் செயல்படுகிறது.

pixa bay

சிறுநீரகங்கள் பத்திரமாக இருக்க வேண்டுமா.. காலையில் இந்த விஷயங்களை கவனிங்க!

pixabay