புத்திசாலிகள் எதையெல்லாம் வெளியில் சொல்ல மாட்டார்கள்?

By Marimuthu M
Apr 04, 2024

Hindustan Times
Tamil

ஒவ்வொருவருக்கும் உண்டான சோகங்களை பொதுவெளியில் பகிரமாட்டார்கள். அதன் பக்கவிளைவுகள் அவர்களுக்குத் தெரியும்

ஒருவரின் சம்பளத்தை பொதுவெளியில் சொல்ல மாட்டார்கள்;அப்படி சொன்னால், ஏமாற்றுபவர்கள் இதனை சாதகமாகப் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.

புத்திசாலிகள் தங்களது தனிப்பட்ட பயங்களை வெளியில் சொல்ல மாட்டார்கள். 

புத்திசாலிகள், குடும்பப் பிரச்னைகளை வெளியில் சொல்ல மாட்டார்கள். இதனால் பிரச்னை பெரிதாகலாம்

பழைய தவறுகளை நாம் சரிசெய்து அந்தத்தவறு மீண்டும் நடைபெறாமல் பார்த்திருப்போம். ஆனால், அதை வெளியில் சொன்னால் உங்களை சிலர் மட்டமாக நினைக்கலாம். 

உடல் நலப் பிரச்னைகள் பற்றி புத்திசாலிகள் வெளியில் சொல்ல மாட்டார்கள். ஏனெனில் சில தவறான வழிகாட்டுதல்கள் கிடைக்கலாம். 

இழந்த வாய்ப்புகள் மற்றும் நமது பழைய கதைகள் ஆகியவற்றை புத்திசாலிகள் வெளியில் சொல்ல மாட்டார்கள்.