அமைதியான தூக்கம் வேண்டுமா? இந்த டிப்ஸ்களை தெரிஞ்சிக்கோங்க!
image credit to unsplash
By Pandeeswari Gurusamy Jun 13, 2025
Hindustan Times Tamil
ஒவ்வொருவருக்கும் தூக்கம் மிகவும் முக்கியமானது. இரவில் போதுமான தூக்கம் இருந்தால் நல்ல சக்தியுடன் சுறுசுறுப்பாக இருப்பார்கள். இதற்கு சில டிப்ஸ்களை பின்பற்றலாம்.
image credit to unsplash
குறிப்பாக இரவு நேரத்தில் அதிகமாக சாப்பிட வேண்டாம். எளிதில் ஜீரணமாகும் உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பே இரவு உணவை முடிக்க வேண்டும்.
image credit to unsplash
டிவி, போன், லேப்டாப் போன்றவற்றுடன் இரவு நேரத்தில் அதிக நேரம் செலவிட வேண்டாம். போனில் இருந்து வெளியாகும் நீல நிற ஒளி தூக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தும்.
image credit to unsplash
தூங்க தயாராகும் முன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான பால் குடிப்பது நல்லது. பாலில் உள்ள டிரிப்டோபன் என்ற அமினோ அமிலம் உடலில் தூக்கத்திற்கு தேவையான மெலடோனின் ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதனால் நன்றாக தூக்கம் வரும்.
image credit to unsplash
இரவு நேரத்தில் டீ, காபி, கூல் டிரிங்க்ஸ், கேக்ஸ் சாப்பிடக்கூடாது. இவற்றில் உள்ள சர்க்கரை, காஃபின் தூக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தும்.
image credit to unsplash
தினசரி உடற்பயிற்சி மூலம் தூக்கமின்மை அறிகுறிகளை கட்டுப்படுத்தலாம். தினமும் போதுமான உடற்பயிற்சி மிகவும் முக்கியம். அமைதியான ஆழ்ந்த தூக்கம், ஆரோக்கியமான உடலைப் பெற காலையில் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
image credit to unsplash
தூங்கும் இடம் அமைதியாகவும், எந்த சத்தமும் இல்லாமல் இருட்டாகவும் இருக்க வேண்டும். தினமும் காலையில் சிறிது நேரம் ஒதுக்கி தவறாமல் தியானம் செய்தால் தூக்கமின்மை பிரச்சனையிலிருந்து விடுபட வாய்ப்புகள் உள்ளன.