Sleep Benefits: பகலில்  தூக்கம் போடுவது நல்லதா? கெட்டதா? 

pixa bay

By Pandeeswari Gurusamy
Jan 24, 2024

Hindustan Times
Tamil

பகலில் தூங்குவது நல்லதா? கெட்டதா? என்பதில் பலரிடையே குழப்பம் உள்ளது.

pixa bay

பகலில் சாப்பிட்டபின் ஒரு குட்டித் தூக்கம் போடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

pixa bay

பெரும்பாலானவர்கள் பகலில் தூங்குவது உடலுக்கு நல்லதல்ல என்று நினைக்கிறார்கள். ஆனால், பகலில் 30 நிமிடம் தூங்குவது என்பது, மூளையின் செயல்பாடுகளுக்கும் மூளையின் செல்களுக்கும் நல்லது என்கின்றன ஆய்வு முடிவுகள்.

pixa bay

பகலில் குறிப்பிட்ட நேரம் மட்டுமே தூங்க வேண்டும். எல்லாவற்றையும் மறந்து அரை மணி நேரம் குட்டித் தூக்கம் போட்டால் உடலும், மூளையும் மீண்டும் சுறுசுறுப்பாகி விடுகின்றன. இந்த தூக்கம் மூளையின் செயல்பாட்டை அதிகரிப்பதாக ஆய்வு முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது

pixa bay

இரவில் மட்டுமே தூங்குபவர்களை விட பகலில் சிறிது நேரம் தூங்குபவர்களின் மூளை செயல்பாட்டுத்திறன் அதிகரித்து காணப்படுகிறதாம்.

pixa bay

பகல் தூக்கத்தால் உயர் ரத்த அழுத்தம் குறைவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருதய நோய்களில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள உதவும்.

pixa bay

ஆய்வுகளின் படி, பகலில் குட்டித் தூக்கம் மட்டுமே பயன் தரும்.அதேநேரம், அதீத பகல் தூக்கம் உடலுக்கு நல்லதல்ல என்றும் பகல் தூக்கம் நீடித்துக்கொண்டே போனால், அவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

pixa bay

இரவில் 6 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும். காலை முதல் மதியம் வரை மூளைக்கு கடுமையான வேலை கொடுக்கும் போது சிறிது நேரம் குட்டித் தூக்கம் புத்துணர்ச்சியையும் உற்சாகத்தையும் தரும். எனவே பகலில் அளவாக தூங்கினால் நலமாக வாழலாம்..!

pixa bay

எனவே பகலில் அளவாக தூங்கினால் நலமாக வாழலாம்..!

pixa bay

தேங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் அசத்தலான 6 பலன்கள்!

pixa bay