நயன்தாராவின் ஆவணப்படத்தில் சந்திரமுகி திரைப்படத்தின் காட்சிகள் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
By Kalyani Pandiyan S Jan 07, 2025
Hindustan Times Tamil
மேலும் இது தொடர்பாக அந்தப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் நயன்தாராவிடம் 5 கோடி நஷ்ட ஈடு கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், சிவாஜி புரடொக்ஷன் சார்பில் இருந்து அறிக்கை ஒன்றை வெளியாகி இருக்கிறது.
அந்த அறிக்கையில், நயன் தாராவின் நெட்ஃபிளிக்ஸ் ஆவணப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் எங்கள் நிறுவனம் தொடர்பான காட்சிகளுக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை.
ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் வைத்த கோரிக்கையின் பேரில் மேற்கூறிய நெட்ஃபிக்ஸ் தொடரில், மேற்கூறிய வீடியோ காட்சிகளின் பயன்பாடு குறித்து, சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திடம் இருந்து எந்த ஆட்சேபனையும் இல்லை என்பதை சரிபார்க்கும் நோக்கத்திற்காக இந்த சான்றிதழ் வழங்கப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
நடிகை நயன்தாரா தனது திருமண ஆவணப் படத்துக்கு நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தயாரித்த நானும் ரவுடிதான் படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் கூறி, 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நடிகை நயன்தாராவுக்கு தனுஷ் தரப்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது.
இதன் காரணமாக நயன்தாராவுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகியும் அவரின் ஆவணப்படம் நெட்ஃபிளிக்ஸில் வெளியாக வில்லை.
இந்த நிலையில் கடந்த ஆண்டு அவரின் ஆவணப்படம் வெளியானது. அதில் தனுஷை எதிர்த்து, அவரது அனுமதியின்றி நானும் ரெளடிதான் படத்தின் காட்சிகள் பயன்படுத்தப்பட்டு இருந்தன.
இதற்கிடையே தன் வழிக்கு வராத தனுஷை சாடி நயன்தாரா அறிக்கை வெளியிட்டார்.
ஜனவரி 20ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான தினசரி பலன்கள் இதோ..