போதுமான அளவு புரதம் எடுத்துக்கொள்ளாவிட்டால் உடலில் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன என்பதை பார்க்கலாம்
By Muthu Vinayagam Kosalairaman May 07, 2025
Hindustan Times Tamil
உடல் எடை குறைப்பு மட்டுமல்லாமல், எலும்பு ஆரோக்கியம் உள்பட பல்வேறு உடல் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படும்
புரதம் உடலுக்கு தேவையான அமினோ அமிலங்களை தருவதுடன் நோய் எதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்துகிறது. இதன் மூலம் தொற்று பாதிப்புகளுக்கு எதிராக போராடுகிறது
புரதம் நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை தருகின்றன. இதன் மூலம் எடையிழப்புக்கு உதவுகிறது. ஆனால் உடலில் போதிய அளவில் புரதம் இல்லாவிட்டால் அடிக்கடி பசி ஏற்பட்டு அதிகமாக சாப்பிட தோன்றும்
புரதம் உடலில் உள்ள திரவ சமநிலையை பராமரிக்கிறது. போதிய புரதம் இல்லாமை திசுக்களில் திரவத்தை அதிகரித்து வயிறு, கால், கைகளில் வீக்கத்தை ஏற்படுத்தும்
தலைமுடி, சரும, நகங்களின் ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியமானதாக புரதம் உள்ளது. எனவே இதன் குறைபாடு முடி உடைதல், சருமம் மந்தமடைவது, நகங்கள் உடைவது போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்
தசைகள் வளர்ச்சி, பழுதுபார்த்தல் போன்றவற்றுக்கு புரதம் மிகவும் முக்கியம். உங்கள் டயட்டில் புரதம் இல்லாவிட்டால் தசையிழப்பு, பலவீனமாக இருக்கும் உணர்வு ஏற்படலாம்
எலும்புகள் ஆரோக்கியத்தை பேனி பராமரிப்பதில் புரதம் முக்கிய பங்கு வகிக்கிறது. போதிய அளவு புரதம் இல்லாமல் இருப்பது எலும்புகளை பலவீனப்படுத்தி, எலும்பு முறிவுக்கான அபாயத்தை அதிகரிக்கிறது
மூளையில் இருக்கும் மனநிலை மாற்றத்தை ஏற்படுத்தும் கெமிக்கல்களை உற்பத்தி செய்வதில் புரதம் முக்கிய பங்கு வகிக்கிறது. போதிய புரதச்சத்து இல்லாவிட்டால் எரிச்சல், உளைச்சல் போன்ற உணர்வு ஏற்படும்
திசுக்களை பழுது செய்வதில் புரதம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை டயட்டில் சேர்த்து கொள்ளவிட்டால் காயங்கள் குணமடைவது தாமதமாகும்
உங்க சமையல் மணம் அண்டை வீட்டாரையும் சுண்டி இழுக்க வேண்டுமா.. சூப்பர் டிப்ஸ் இதோ!