நடிகை ஸ்ருதிஹாசன் தன்னுடைய கடந்த கால உறவுகள் குறித்து பொதுவெளியில் பெரிதாக எதுவும் பேசிக்கொண்டது கிடையாது. இன்ஸ்டாவில் பார்ட்னருடன் போட்டோ மற்றும் வீடியோ போடுவதுடன் நிறுத்திக்கொண்டார். 

By Kalyani Pandiyan S
Apr 27, 2025

Hindustan Times
Tamil

முதலில் மைக்கேல் கோர்சேல் உடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த இவர் பின்னர் டாட்டூ கலைஞரான சாந்தனு ஹசாரிகா உடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். கடந்த வருடம் ஹசாரிகா உடனான உறவையும் அவர் முறித்துக்கொண்டார்.

காயப்படுத்தி இருக்கிறேன் இந்த நிலையில் அண்மையில் ஃபிலிம் ஃபேர் நிறுவனத்திற்கு பேட்டிக்கொடுத்த அவர், இந்த உறவு முறிவுகள் குறித்து வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

இது குறித்து அவர் பேசும் போது, ‘நான் சிலரை காயப்படுத்தி இருக்கிறேன். நான் அதைச் செய்யக்கூடாது என்று நினைக்கிறேன். மற்றபடி எனக்கு அதில் எந்த வருத்தமும் இல்லை. பராவாயில்லை. நான் ஒரு கோமாளிதான். பார்த்துக்கொள்ளலாம்.

எனக்கு மிகவும் மதிப்புமிக்கவர்களாக இருந்த சிலரை நான் தவறுதலாக காயப்படுத்திவிட்டேன். இப்போது நான் அதற்காக மன்னிப்பு கேட்பதில் என் நேரத்தை செலவிடுகிறேன்.’ என்று பேசினார்.

மேலும் பேசிய அவர், ‘நம் அனைவருக்கும் ஒரு ஆபத்தான முன்னாள் காதலர் என்பது உண்டு. நான் அந்த அத்தியாயத்தை எந்த வருத்தமும் இல்லாமல் மூடிவிட்டேன்.

Enter text இன்னும் சில பேர் என்னை நோக்கி இவர் உங்களின் எத்தனாவது காதலன் என்று கேட்கிறார்கள். நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ளவில்லை. உங்களுக்கு இது ஒரு எண் மட்டுமே; ஆனால், என்னைப் பொறுத்தவரை அது நான் விரும்பும் எனக்கான அன்பைப் பெறுவதில், நான் எத்தனை முறை தோல்வியடைந்தேன் என்பதை பற்றியது. 

அதைப்பற்றி நான் பெரிதாக கவலைப்படவில்லை என்றாலும் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. காரணம் நானும் மனிதர்தானே’’ என்று பேசினார்.

கவனம் மக்களே.. சூரியன் ரிஷப ராசியில் சஞ்சரிப்பதால் எந்த 3 ராசிகளுக்கு பாதகம்!