இயற்கையான முறையில் தலைமுடி உதிர்வை தடுக்க பல வழிகள் உள்ளன. அதில் ஒன்றாக சில விதைகளை உங்கள் டயட்டில் சேர்த்துக்கொள்வது

By Muthu Vinayagam Kosalairaman
May 27, 2024

Hindustan Times
Tamil

தலைமுடி உதிர்வு, முடி உடைதல், கொத்தாக உதிர்ந்த வழுக்கை தெரிவது பலருக்கும் கவலை தரும் விஷயமாகவே உள்ளது

மனஅழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு, ஹார்மோன்கள் சமநிலையின்மை போன்ற பல்வேறு காரணங்களால் தலைமுடி உதிர்வு ஏற்படுகிறது

தலைமுடி உதிர்வை தடுத்து, முடி வளர்ச்சிக்கு உதவும் விதைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்

துத்தநாகம், தாமிரம், மெக்னீசியம், செலனியம், கால்சியம் போன்றவை பூசணி விதையில் நிரம்பியுள்ளன.  இவை டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை அதிகரித்து முடிகள் உடைவதை தடுக்கிறது

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், லிக்னான்ஸ் நிறைந்திருக்கும் ஆளி விதைகள், மயிர்கால்களில் உள்ள ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதனால் தலைமுடி உதிர்வு தடுக்கப்படுகிறது

காமா லினோலெனிக் அமிலம் நிறைந்திருக்கும் சூரியகாந்தி விதை தலைமுடியை கண்டிஷன் செய்கிறது. தலை முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன் பளபளப்பாக்க உதவுகிறது

துத்தநாகம், தாமிரம், சியா விதைகள் நிறைந்திப்பதுடன் தலைமுடிக்கு ஊட்டமளித்து தலைமுடிகள் உடைவதை தடுக்கிறது. இதில் இருக்கும்  அழற்சிக்கு எதிரான பண்புகள் மயிர்கால்களை ஏற்படும் அழற்சிகளை போக்க உதவுகிறது

எள்ளு விதைகளில் அதிக அளவில் இரும்புசத்து, கொழுப்பு அமிலங்கள் தலை முடி வேர்களுக்கு ஊட்டமளித்து தலை முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது

ஒமேகா 3, 6, 9 கொழுப்பு அமிலங்கள் மயிர்கால்களில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. தலைமுடி வளர்ச்சியை மேம்படுத்தி, வேர்களுக்கு ஊட்டமளிக்கிறது

வெந்தயத்தில் டிஎச்டி அளவு என்கிற ஒரு வித ஹார்மோன் தலைமுடி உதிர்வுக்கு காரணமாக உள்ளது. இதை அதிகரிப்பதன் மூலம் தலைமுடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது

தர்பூசணி பல ஆரோக்கிய நன்மைகளுடன் வருகிறது