சந்திர பகவான் அஸ்தமனத்தால் எந்த ராசிகளுக்கு பண மழை கொட்டும் பாருங்க!

Pixabay

By Pandeeswari Gurusamy
Apr 12, 2025

Hindustan Times
Tamil

ஜோதிடத்தில் சந்திரன் ஒன்பது கிரகங்களில் ஒன்று. மனம், தாய், மனநிலை, மனோபலம், பொருட்கள், பயணம், மகிழ்ச்சி, அமைதி, செல்வம், இரத்தம், இடது கண், மார்பு போன்றவற்றின் காரக கிரகமாக சந்திரன் கருதப்படுகிறது. 

Pixabay

சந்திரன் கடக ராசியின் அதிபதியும், ரோஹிணி, ஹஸ்தா மற்றும் ஸ்ரவண நட்சத்திரங்களின் அதிபதியுமாகும். அனைத்து கிரகங்களிலும் சந்திரன் மிக வேகமாகச் செல்கிறது. சுமார் ஒன்றரை நாளில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்கிறது.

Pixabay

சந்திரனின் நற்பலனால் ஒருவர் அழகாகவும், கவர்ச்சியாகவும் இருப்பார். 26 மே 2025 காலை 4 மணி 17 நிமிடத்திலிருந்து 28 மே இரவு 8 மணி 58 நிமிடம் வரை சந்திரன் மறைந்திருக்கும். சந்திரன் மறைவதால் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். சந்திரன் மறைவதால் எந்தெந்த ராசிகளுக்கு நன்மை என்பதைப் பார்ப்போம்.

Pixabay

மிதுனம் : பணவரவு அதிகரிக்கும். திருமணம் நிச்சயமாகலாம். குழந்தைகளால் நல்ல செய்தி கிடைக்கும். வேலை, தொழிலில் வெற்றி கிடைக்கும். பதவி உயர்வு வாய்ப்புகள் அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் என கூறப்படுகிறது.

Canva

சிம்மம் : வேலை, தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பண நிலைமை மேம்படும். நீண்ட நாட்களாகக் கிடைக்காமல் இருந்த பணம் கிடைக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள் என கூறப்படுகிறது.

Canva

கன்னி : வேலை, தொழிலில் வளர்ச்சிக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் மரியாதை அதிகரிக்கும். மேலதிகாரிகளின் ஆதரவுடன் வேலையில் உயர்வு கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கலாம். பழைய முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும். செல்வம் பெருகும் என நம்பப்படுகிறது.

Canva

தனுசு : தொழில் ரீதியாக பெரிய மாற்றங்கள் ஏற்படும். வேலை சம்பந்தமான நல்ல செய்திகள் கிடைக்கும். வேலை தேடல் நிறைவேறும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் பெரிய வெற்றி கிடைக்கும் என கூறப்படுகிறது.

Canva

பொறுப்பு துறப்பு : இந்த தகவல் நம்பிக்கைகள், வேதங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. தகவல் நோக்கங்களுக்கு மட்டுமே. எந்தவொரு தகவலையும் ஏற்றுக்கொள்வதற்கு முன் நிபுணர்களை அணுகவும்.

Canva

உலர் திராட்சை ஊற வைத்த நீரை குடிப்பதால் கிடைக்கும் அற்புதமான பலன்களை பாருங்க!

Canva