குழந்தைகள் பற்களை பாதுகாக்க எந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் பாருங்க!

Pexels

By Pandeeswari Gurusamy
Apr 15, 2024

Hindustan Times
Tamil

குழந்தைகளின் ஆரோக்கிய விஷயத்தை பொறுத்தவரை, அவர்களின் ஒட்டு மொத்த வளர்ச்சியிலும் பெற்றோர்கள் அக்கறை செலுத்துகிறார்கள். உடலிலுள்ள மற்ற உறுப்புகளைப் போல் குழந்தைகளின் பற்கள் விஷயத்திலும் தனியொரு கவனத்தை பெற்றோர்கள் செலுத்த வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் குழந்தகளின் வாய் பகுதியில் ஏற்படும் நோய் தொற்றுகள் முற்றிலும் தவிர்க்கப்படும்.

Pexels

குறிப்பாக இனிப்பு பலகாரங்களை விரும்பு சாப்பிடுவதில் நாட்டம் கொண்ட குழந்தைகள் வீடு, கடை என எங்கு சென்றாலும் இனிப்பை கண்டால் ஒரு புடி பிடித்துவிடுவார்கள். அதேபோல் ஜங்க் உணவுகள் மீதும் அவர்களின் மோகம் அளப்பரியதாகவே உள்ளது. இந்த இரண்டு உணவுகளும் பற்களில் ஒட்டிக்கொண்டு துவாரங்கள் உருவாக வழிவகுக்கும். எனவே இதுபோன்ற பாதிப்புகளை தவிர்க்க தொடக்கம் முதலே குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு பழக்கத்தை கடைப்பிடிக்க கற்றுக்கொடுக்க வேண்டும்.

Pexels

அதிக சர்க்கரை அளவு கொண்ட சில மோசமான உணவுகள் உங்கள் குழந்தைகளின் பற்களை பதம் பார்க்கலாம். ஆனால் ஆபத்து அதிகம் நிறைந்திருந்தால் குழந்தைகள் அதை சாப்பிடுவதை கட்டுப்படுத்த இயலாது. இருப்பினும் அதன் அளவை மெல்ல குறைக்கலாம்.

Pexels

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த உணவுகளான பாதாம், முந்திரி, பிஸ்தா உள்ளிட்ட கொட்டை வகைகள், பீன்ஸ், திராட்சை, ஆப்பிள் போன்றவற்றை கொடுக்கலாம். இவை அழற்சிக்கு எதிராக செயல்படுவதோடு, பற்களில் தொற்றுகள் ஏற்படுவதையும் தடுத்து ஈறுகள் மற்றும் இதர பற்கள் சார்ந்த நோய் பாதிப்புகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.

Pexels

பற்களின் ஆரோக்கியத்துக்கு வைட்டமின் சி முக்கிய தேவையாக உள்ளது. இவை ஈறுகளில் வீக்கம் ஏற்படுவதையும், இரத்தபோக்கு உண்டாவதையும் தடுக்கிறது. குழந்தைகள், பெரியவர்கள் என இருவரும் மேற்கூறிய பழங்களை பற்களின் ஆரோக்கியத்தை மனதில் வைத்து சாப்பிடலாம்.

Pexels

கீரைகள் பற்களின் எனாமல் கிழவதை தடுக்கிறது. பற்களின் எனாமல் கால்சீயம், பாஸ்பரஸ் சத்துக்கள் நிறைந்தவையாக உள்ளது. எனவே இந்த சத்துக்கள் நிறைந்த உணவை அதிகம் சாப்பிட்டால் பற்களில் அரிப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

Pexels

குழந்தைகளுக்கு சமச்சீரான உணவுகளை கொடுக்க வேண்டும். பிரஷ்ஷான் உணவுகளான பழங்கள், காய்கறிகள், சாலட், பால் சார்ந்த பொருள்கள், மெலிதான இறைச்சிகள், மீன் ஆகியவற்றோடு கட்டுப்பாடுகள் நிறைந்த உணவுமுறையை கடைப்பிடிக்க வேண்டும்.

Pexels

மிட்டாய், கேக், குக்கீக்கள், ஐஸ்கிரீம் போன்றவை அதன் தோற்றத்தாலும், வண்ணத்தாலும் குழந்தைகளை பெரிதும் கவர்கிறது. ஆனால் அவற்றை போலவே கவனமாக மூலப்பொருள்களை தேர்வு செய்து அதுபோன்று வீட்டிலேயே அளவாக தயார் செய்து கொடுக்கலாம்.

Pexels

நெல்லிக்காயில் உள்ள நன்மைகள்