அதிமுக - தவெக இணைந்தால் திமுக கூட்டணியை வீழ்த்த முடியும் என்று நான் நம்பிகிறேன் என யூடியூபர் சவுக்கு சங்கர் தெரிவித்து உள்ளார்

By Kathiravan V
Feb 04, 2025

Hindustan Times
Tamil

தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘அதிமுக உடன் விஜய் இணையமாட்டார் என திமுகவினர் முழுமையாக நம்பிக் கொண்டு இருந்தனர். ஆனால் இப்போது கூட்டணி சேர்ந்துவிடுவார்களோ என்பதை நம்பத் தொடங்கிஉ உள்ளனர்’ என கூறி உள்ளார்.

”24 மணி நேரமும் திரு உதயநிதி அவர்கள் விஜயை பற்றியே சிந்தித்துக் கொண்டு இருக்கிறார் என்பதுதான் எனக்கு கிடைக்கும் தகவல்”

”தேர்தலுக்கு முன் கூட்டியே கூட்டணி ஆட்சி குறித்து அறிவிப்பதை அதிமுக ஒத்துக் கொள்ளாது. விஜய் துணை முதலமைச்சர் பதவியை கேட்டாலும் அதிமுக ஒருபோதும் ஒத்துக் கொள்ளாது”

”அதிமுக ஆட்சியில் பங்கு தர ஒத்துக் கொள்ளாத பட்சத்தில், நல்ல எதிர்க்கட்சித் தலைவராக விஜய் வரலாம். ஆனால் அதிமுக உடன் விஜய் கூட்டணி வைக்காமல் விஜய் தனித்து போட்டியிட்டால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்பது விஜய்க்கு நன்றாக தெரியும்.”

”திமுக மீண்டும் ஆட்சி அமைக்கவா விஜய் ஆயிரம் கோடி ரூயாய் மதிப்புள்ள சினிமா வணிகத்தை விட்டு வந்து உள்ளார்.”

சிஏஏ, பரந்துர் விமான நிலையம் போன்ற மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்துவோம். தனி மனிதர்களை சார்ந்து தனது அரசியல் இருக்காது என விஜய் கூறி உள்ளார்,

”விஜய் அவர்களை புறக்கணித்துவிட்டு எந்த அரசியல் கட்சியும், அரசியல் செய்ய முடியாது” என சவுக்கு சங்கர் தெரிவித்து உள்ளார்.

ஆரோக்கியமான செரிமானத்திற்கு இந்த 9 காலை பழக்கங்களைப் பின்பற்றுங்கள்.

Image Credits : Adobe Stock