கடலோரகவிதைகள் படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து நடிகை ரேகாவும், சத்யராஜூம் பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்திருக்கின்றனர். 

By Kalyani Pandiyan S
Aug 15, 2024

Hindustan Times
Tamil

இது குறித்து ரேகா பேசும் போது, “ என்னுடைய  முதல் திரைப்படமான கடலோரகவிதைகள் திரைப்படம், அடிப்படையாகவே மிகவும் ஸ்ட்ராங்காக அமைந்து விட்டது. காரணம் என்னவென்றால், அந்த படத்தில் இளையராஜா பாரதிராஜா, கண்ணன் போன்ற மிகப் பெரிய ஆளுமைகள் பணியாற்றியிருந்தனர். அப்போது சத்யராஜ் மிகவும் உயரமாக, வாட்ட சாட்டமாக இருப்பார். அவருக்கு அப்பொழுது நெஞ்சில் அவ்வளவு முடி இருக்கும். அதை பார்க்கும் பொழுது, என்ன இவருக்கு அங்கே இவ்வளவு முடியிருக்கிறது என்று ஆச்சரியமாக இருக்கும். 

நான் படப்பிடிப்பில் மிகவும் குறும்புத்தனமாகவே இருந்தேன். நான் அங்கும், இங்குமாக விளையாடிக் கொண்டே இருப்பேன். இதை பார்க்கும் சத்யராஜ், பாரதிராஜா சாரை கூப்பிட்டு, சார் நீங்கள் ஜெனிஃபர் டீச்சர் கதாபாத்திரத்தை எங்கேயோ வைத்திருக்கிறீர்கள். ஆனால் அந்தப் பெண்ணை பாருங்கள். அங்கு ஓடிப் பிடித்து, எதையோ சுட்டு சாப்பிட்டு கொண்டு இருக்கிறது என்று சொல்லிக் கொடுப்பார். 

இதையடுத்து பாரதிராஜா சார், என்னை டேய் இங்கே வா என்று என்னை அரட்டுவார். அப்போது பெரிய பந்தாவெல்லாம் யாரிடமும் இருக்காது. நான் சத்யராஜ் சார் நடிப்பதை பார்ப்பேன். பாரதி சார் சொல்லிக் கொடுப்பதை 30 சதவீதம் செய்தாலே நினைத்தது வந்துவிடும். கடலோர கவிதைகள் திரைப்படத்தில் நான் மீனை எடுத்துக் கொண்டு, அழுது கொண்டே வருவது போன்ற காட்சி ஒன்று இருக்கும்.

அந்த சீனில் பாரதிராஜா சார் எமோஷன் சரியாக வரவில்லை என்று சொல்லி என்னை அவ்வளவு திட்டு திட்டினார். நீ ஆசைப்பட்ட ஒருவனை காணவில்லை. அதை நினைத்து அழு அழு என்று கடிந்து கொண்டே இருந்தார். அவரை அவர் திட்டியதை பார்த்து பார்த்தே நான் அழுதுவிட்டேன். அப்படித்தான் அந்த காட்சி நடந்தது” என்று பேசினார். 

அதிக புரதம் கொண்ட சாண்ட்விச்கள்