Sarathkumar: பிரபல நடிகரான சரத்குமாரின் முதல்மனையான சாயாவிற்கு பிறந்தவர்தான் வரலட்சுமி சரத்குமார். இவருக்கு அண்மையில் நிக்கோலுடன் திருமணம் நடந்து முடிந்தது. நிக்கோலுக்கு ஏற்கனவே திருமணமாகி, ஒரு குழந்தையும் இருக்கிறது. இந்த நிலையில், இந்த திருமணம் குறித்து பலர் பலவிதமாக கமெண்ட் செய்தார்கள். அந்த கமெண்டுகளுக்கு நடிகர் சரத்குமார் அண்மையில் கலாட்டா சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பதில் கொடுத்திருக்கிறார். 

By Kalyani Pandiyan S
Jul 11, 2024

Hindustan Times
Tamil

இது குறித்து அவர் பேசும் போது, “நான் எனது மகளுக்கு ஒரு மணமகன் அமைகிறார் என்றால், முதலில் பார்ப்பது அவரிடம் முறையான ஒழுக்கம் இருக்கிறதா என்பதைத்தான். அளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷம். ஆகையால், மிகவும் அதிகமான எதிர்பார்ப்பெல்லாம் எனக்கு கிடையாது. ஓரளவுக்கு அவருக்கு ஒழுக்கம் இருக்கும் பட்சத்திலேயே, அவர் என்னுடைய மகளை மிகவும் நன்றாக பார்த்துக் கொள்வார். 

என்னுடைய இரண்டு மருமகன்களுமே, பிட்னசில் அதீத ஆர்வம் கொண்டு இருந்தது எனக்கு அதிர்ஷ்டமாக அமைந்துவிட்டது. ஒரு ஆண் மகனுக்கு தன்னுடைய மனைவியையோ, தாயையோ பாதுகாத்துக் கொள்ளும் அளவிற்கு, உடலில் பலம் இருப்பதே இப்போது பெரிய விஷயமாக இருக்கிறது. இந்த காலத்து இளைஞர்கள் ஒருவருடன் பழகுகிறார்கள். அந்த நட்பு தொடரலாம், தொடராமலும் போகலாம். அவர்களுக்குள் சண்டை வந்திருக்கும். பிரிந்திருப்பார்கள். மீண்டும் இணைந்து இருப்பார்கள், என எல்லாமும் நடந்து இருக்கும். 

இவையெல்லாம் நடந்த பின்னர் கூட, ஒரு கட்டத்தில் இவர் தான் நம்முடைய பார்ட்னர் என்று முடிவுக்கு வருவார்கள். அந்த முடிவை சரியா, தவறா என்று மட்டும்தான் அப்பா என்ற இடத்தில் இருந்து நான் பார்க்கிறேன். என்னுடைய முந்தைய மருமகனையும், அப்படித்தான் சந்தித்தேன். 

என் மகள்கள் விஷயத்தில் அப்படி நான் ஆராயும் பொழுது, அவர்கள் என்னுடைய மகளை மனதளவிலும், உடலளவிலும் பாதுகாத்துக் கொள்ளும் திறன் உடையவர்களாக இருந்தார்கள். என்னுடைய இரண்டு மருமகன்களும் சிகரெட் மற்றும் மதுப்பழக்கம் இல்லாதவர்களாக இருந்தார்கள். சிலர் எங்கள் குடும்பம் பற்றி தவறான விதத்தில் கமெண்ட் செய்கிறார்கள். மகள்களை ஆசை, ஆசையாக பார்த்து வளர்த்து அடுத்த வீட்டிற்கு அனுப்பி வைக்கிறோம். இது எவ்வளவு பெரிய வலி தெரியுமா? கமெண்ட் செய்பவர்களுக்கு உண்மை நிலவரம் தெரியாது. ஆனால், அந்த கமெண்ட்கள் உண்மையில் பெரிய வலியை தரும்.” என்று பேசினார். 

இப்போதைய மருமகனையும் அப்படித்தான் சந்தித்து பேசினேன். முதலில் அவர்களிடம் நான் பர்சனலாக பேசுவேன். அப்படி பேசும் பொழுதே, அவர்களுடைய உள்நோக்கம் என்ன என்பதை நான் கண்டுபிடித்து விடுவேன். அவர்கள் பணத்திற்காக கல்யாணம் செய்து கொள்கிறீர்களா அல்லது பிரபலத்திற்காக கல்யாணம் செய்து கொள்கிறீர்களா? உள்ளிட்ட விஷயங்களை நான் ஆராய்வேன். ” என்று பேசினார். 

விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நயன்தாராவிற்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளன.