சனி உத்திரட்டாதி நட்சத்திர பயணத்தால் பொற்காலத்தை அனுபவிக்க போகும் ராசிகள்

Canva

By Suriyakumar Jayabalan
May 08, 2025

Hindustan Times
Tamil

நவக்கிரகங்களில் மிக முக்கிய கிரகமாக விளங்கக்கூடியவர் சனிபகவான். இவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. சனிபகவான் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

Canva

சனி பகவான் கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி அன்று தனது சொந்தமான நட்சத்திரமான உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்தார். சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு சனி பகவான் தனது சொந்தமான நட்சத்திரமான உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்துள்ளார்.

Canva

 சனி பகவான் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

Canva

ரிஷப ராசி: சனி நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. உங்கள் ராசியில் லாப வீட்டில் சனி இருக்கின்றார். இதனால் உங்களுக்கு வருமானத்தில் உயர்வு இருக்கும் என கூறப்படுகிறது. பணக்கார யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.

Canva

கடக ராசி: சனி நட்சத்திர இடம் மாற்றம் உங்கள் வாழ்க்கையில் செழிப்பை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஒவ்வொரு வேலையிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும் என கூறப்படுகிறது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும் என கூறப்படுகிறது. 

Canva

துலாம் ராசி: சனி நட்சத்திர இடமாற்றம் உங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது. நீதிமன்ற வழக்குகளில் உங்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும் என கூறப்படுகிறது. 

Canva

பொறுப்பு துறப்பு : இந்த தகவல் நம்பிக்கைகள், வேதங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. தகவல் நோக்கங்களுக்கு மட்டுமே. எந்தவொரு தகவலையும் ஏற்றுக்கொள்வதற்கு முன் நிபுணர்களை அணுகவும்.

Canva

உங்க சமையல் மணம் அண்டை வீட்டாரையும் சுண்டி இழுக்க வேண்டுமா.. சூப்பர் டிப்ஸ் இதோ!