சனி நட்சத்திர இடமாற்றத்தால் பணக்கார வாழ்க்கை பெறப் போகின்ற ராசிகள்
Canva
By Suriyakumar Jayabalan May 08, 2025
Hindustan Times Tamil
ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்கள் அவபோது தங்களது ராசி மற்றும் நட்சத்திரங்களை மாற்றி செல்வார்கள். இந்த காலகட்டத்தில் மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர்.
Canva
சனி பகவான் இவர் 2 அரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். 400 நாட்களுக்கு ஒரு முறை நட்சத்திர இடமாற்றத்தை செய்யக்கூடியவர். சனி பகவானின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
Canva
சனி பகவான் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி ஒன்று உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு செல்கின்றார். இது இவருடைய சொந்தமான நட்சத்திரமாகும். சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திர பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Canva
மிதுன ராசி: சனி நட்சத்திர இடமாற்றம் வேலை மற்றும் தொழிலில் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுக்க போவதாக கூறப்படுகிறது. பல வழிகளில் இருந்து உங்களுக்கு பணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு வேலைகளிலும் உங்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும் என கூறப்படுகிறது. புதிய பொறுப்புகள் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது.
Canva
கும்ப ராசி: சனி நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை அதிகப்படுத்தி கொடுக்கும் இடம் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. திடீர் பணம் ஆதாயங்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
Canva
மகர ராசி: சனி நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு தைரியத்தை அதிகப்படுத்தி கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. தேர்வுகள் எழுதிய மாணவர்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும் என கூறப்படுகிறது. நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் என கூறப்படுகிறது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது.
Canva
பொறுப்பு துறப்பு : இந்த தகவல் நம்பிக்கைகள், வேதங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. தகவல் நோக்கங்களுக்கு மட்டுமே. எந்தவொரு தகவலையும் ஏற்றுக்கொள்வதற்கு முன் நிபுணர்களை அணுகவும்.
Canva
சனி பகவான் ஒரு நீதிமான், துலாம் ராசியில் அவர் உச்சம் அடைவார். கும்பம், மகரம் ராசிகளில் அவர் ஆட்சி ஆவார். மேஷ ராசியில் அவர் நீச்சம் அடைவார்.