சனி வக்கிர பெயர்ச்சி மூலம் பணக்கார யோகத்தை பெறுகின்ற ராசிகள் 

Canva

By Suriyakumar Jayabalan
May 09, 2025

Hindustan Times
Tamil

ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். ஒரு நட்சத்திரத்தில் இருந்து மற்றொரு நட்சத்திரத்திற்கு செல்ல 400 நாட்கள் எடுத்துக் கொள்கிறார். 

Canva

நீதிமானாக இருக்கின்ற காரணத்தினால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். சனிபகவான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீன ராசியில் நுழைந்துள்ளார். அந்த வகையில் வருகின்ற ஜூலை 13ஆம் தேதி அன்று சனி பகவான் மீன ராசியில் வக்கிர நிலை அடைகின்றார். இந்த ராசியில் 138 நாட்கள் வக்கிர நிலையில் பயணம் செய்யப்போகின்றார். 

Canva

சனி வக்கிர பெயர்ச்சி அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பணக்கார யோகத்தை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

Canva

கடக ராசி: சனி வக்கிர பெயர்ச்சி உங்களுக்கு சிறப்பான நன்மைகளை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் இந்த நிகழ்வு நடக்கின்றது. பல்வேறு துறைகளில் உங்களுக்கு மகத்தான வெற்றி கிடைக்கும் என கூறப்படுகிறது. பண ஆதாயங்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

Canva

கும்ப ராசி: சனி வக்கிர பெயர்ச்சி உங்களுக்கு மகிழ்ச்சியை அதிகப்படுத்தி கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. பல்வேறு விதமான புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு நிறைய பணத்தை சம்பாதித்து கொடுக்கும் என கூறப்படுகிறது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது. 

Canva

மீன ராசி: சனி வக்கிர பெயர்ச்சி உங்களுக்கு பயனுள்ளதாக அமையும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நிதி நிலைமையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் என கூறப்படுகிறது. தொழிலில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. 

Canva

பொறுப்பு துறப்பு : இந்த தகவல் நம்பிக்கைகள், வேதங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. தகவல் நோக்கங்களுக்கு மட்டுமே. எந்தவொரு தகவலையும் ஏற்றுக்கொள்வதற்கு முன் நிபுணர்களை அணுகவும்.

Canva

உங்க சமையல் மணம் அண்டை வீட்டாரையும் சுண்டி இழுக்க வேண்டுமா.. சூப்பர் டிப்ஸ் இதோ!