ரெம்ப சிம்பிளான சாண்ட்விச் வீட்டிலேயே செய்யலாம்.. குழந்தைகள் ஆசையா சாப்பிடுவாங்க
By Pandeeswari Gurusamy Apr 16, 2025
Hindustan Times Tamil
தேவையான பொருட்கள்: 1 வெள்ளரிக்காய், 2 தக்காளி, 1/2 டீஸ்பூன் பச்சை மிளகாய் பேஸ்ட், 1 டேபிள்ஸ்பூன் வெண்ணெய், தேவையான அளவு கருப்பு உப்பு, 1/2 டீஸ்பூன் சாட் மசாலா, அரை டீஸ்பூன் வறுத்த சீரகம், 4 முதல் 6 பிரட் துண்டுகள்
புதிய பிரட் துண்டுகளை எடுத்து அவற்றின் மீது வெண்ணெய் தடவவும். பின்னர் பச்சை மிளகாய் பேஸ்டை இரண்டு பிரட் துண்டுகளின் மீது தடவவும்.
அதன் மீது தேவையான அளவு கருப்பு உப்பு மற்றும் வறுத்த சீரக தூளை உங்கள் சுவைக்கு ஏற்ப தூவவும்.
பிரட் துண்டுகளில் ஒன்றில் மெல்லியதாக, வட்டமாக வெட்டப்பட்ட வெள்ளரி மற்றும் தக்காளி துண்டுகளை நேர்த்தியாக அடுக்கவும்.
பின்னர் சாட் மசாலாவைத் தூவி மற்றொரு பிரட் துண்டுடன் மூடி வைக்கவும்.
சாண்ட்விச் சுவையாக இருக்க, இரண்டாவது துண்டு பிரட்டிலும் வெண்ணெய் தடவ வேண்டும். சுவை அருமைனயாக இருக்கும்.
பின்னர் அவற்றை முக்கோண வடிவில் வெட்டி பரிமாறவும். குளிர்ச்சியான மற்றும் சுவையான வெள்ளரி-தக்காளி சாண்ட்விச் தயார்
இந்த சாண்ட்விச் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். ருசி அட்டகாசமாக இருக்கும்.
பண மழை கொட்டும் ராசிகள்.. ஜாலிதான்.. ராகு பெயர்ச்சி யாருக்கு சாதகம் தெரியுமா!