சத்தான சாமை அரிசியில் ஹெல்த்தியான கிச்சடி செய்யலாமா!

By Pandeeswari Gurusamy
Mar 28, 2025

Hindustan Times
Tamil

தேவையான பொருட்கள் : ஒரு கப் சாம அரிசி, 1-2 உருளைக்கிழங்கு,1 காரட் , 2 பீன்ஸ், சீரகம்- 1 ஸ்பூன், கருப்பு மிளகு - 1 ஸ்பூன், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி விழுது, நெய் - 3 ஸ்பூன், முந்திரி பருப்பு -10, கொத்த மல்லி இலைகள் - சிறிதளவு

முதலில், சாமை அரிசியை தண்ணீர் சேர்த்து நன்றாக சுத்தம் செய்து எடுத்து கொள்ள வேண்டும்

Pixabay

பின்னர் இந்த அரிசியை குறைந்தது ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

ஒரு குக்கர் அல்லது எந்த தடிமனான அடிப்பகுதி கொண்ட பாத்திரத்திலும் ஒரு டீஸ்பூன் தேசி நெய் சேர்க்க வேண்டும். வேண்டுமானால் நீங்கள் கடலை எண்ணெய்யும் சேர்க்கலாம்.

இந்த நெய்யில் சீரகத்தை வறுத்து, இஞ்சி-பச்சை மிளகாய் விழுதையும் சேர்க்கவும்.  நீங்கள் விழுதைச் சேர்க்க விரும்பவில்லை என்றால், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியை நன்றாக நறுக்கி, சேர்க்கவும்.

கருப்பு மிளகு தூள் சேர்த்து சில நொடிகள் வதக்கவும். துண்டுகளாக நறுக்கிய உருளைக்கிழங்கு, கேரட் பீன்ஸ் சேர்த்து வதக்கவும். நீங்கள் விரும்பினால், வேறு எந்த சைவ காய்கறிகளையும் சேர்க்கலாம்.

காய்கள் லேசாக வதங்கிய பின் ஊற வைத்த சாம அரிசியின் தண்ணீரை வடிகட்டி, குக்கரில் சேர்க்க வேண்டும். இரண்டு நிமிடங்கள் கிளறி, வதக்கி, தேவையான அளவு கல் உப்பு சேர்க்கவும்.

இப்போது அரிசி எடுத்த அதே கப்பில் 3 கப் தண்ணீர் சேர்க்க வேண்டும். நீங்க மிகவும் குழைவாக வேண்டாம் என்று நினைத்தால்  2 முதல் 2 1/2 கப் தண்ணீர் சேர்த்து 2 விசில் வைக்கவும் அல்லது மூடி வைத்து சமைக்கவும்.

அது வெந்ததும், அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை சேர்க்க வேண்டும். கடைசியாக ஒரு ஸ்பூன் நெய்யில் முந்திரி பருப்புகளை வருத்து சேர்த்து இறக்கினால் ஹெல்தியான சாமை பொங்கல் ரெடி.. இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

கணவன் - மனைவி ரிலேஷன்ஷிப் ஒற்றுமையாக இருக்க என்ன செய்யலாம்?