பஞ்சு போல சாஃப்டான சாமை இட்லி.. ஹெல்தியானது.. எப்படி ஈசியா செய்யலாம் பாருங்க!

Pexels

By Pandeeswari Gurusamy
Mar 25, 2025

Hindustan Times
Tamil

தேவையான பொருட்கள் : ஒரு கப் சாமை அரிசி, இரண்டு பெரிய தேக்கரண்டி ஜவ்வரிசி மாவு, அரை கப் தயிர், தேவையான அளவு தண்ணீர், ஒரு சிறிய தேக்கரண்டி பேக்கிங் சோடா, சுவைக்கு ஏற்ப உப்பு

Pexels

இட்லி தயாரிக்க, சாமை அரிசியை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து, அதன் பொடியை தயார் செய்யவும். 

Pexels

பின்னர் ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசி மாவு, தயிர், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும். 

Pixabay

நன்றாகக் கலந்த பிறகு, சிறிது நேரம் ஒதுக்கி வைக்கவும். பின்னர் மாவு ஊறி கெட்டியாகும்போது, ஒரு கரண்டியால் ஒரு முறை கலக்கவும். 

Pixabay

இந்த மாவில் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து, பின்னர் சமையல் சோடாவை சேர்த்து நன்கு கலக்கவும்.

Pexels

இப்போது இட்லி தட்டுகளில் எண்ணெய் தடவி, மாவை அச்சுகளில் நிரப்பவும். இட்லி ஸ்டீமரில் தண்ணீர் சேர்க்கவும்.

Pexels

அச்சுகளை மேலே வைத்து 15 முதல் 20 நிமிடங்கள் ஆவியில் வேக வைக வைத்தால் சுடச்சுட சாமை இட்லி தயார்.

Pexels

இந்த இட்லிகளை வழக்கம் போல் சட்னி சாம்பாருடன் சாப்பிட ருசி அட்டகாசமாக இருக்கும்.

Pexels

நேற்றைய தினம் (20 -04-2025) அமீர் - பாவனி திருமணம் கோலகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்ற அமீரின் தாயார் மற்றும் சகோதரி பேசியவற்றை இங்கே பார்க்கலாம்.