சரிவிகித உணவையும், உங்கள் உடலுக்கு ஆற்றலையும் வழங்கும் 7 சாலட்கள்
By Priyadarshini R Jul 30, 2023
Hindustan Times Tamil
ஃப்ரூட் சாலட், ஆப்பிள், மாதுளை, அன்னாசி, கிவி, ஸ்ட்ராபெர்ரி, கொழுப்பில்லாத யோகட் மற்றும் நார்ச்சத்து நிறைந்த இந்த பழங்கள் கலந்த கலவை உங்களுக்கு பசி ஏற்படாமல் தடுப்பதோடு, உங்கள் உடல் எடை குறைவதற்கும் உதவும்.
வெஜிடபிள் (காய்கறிகள்) சாலட், காய்கறிகளை சமைக்காமல், வேக வைக்காமல் அப்படியே பச்சையாக சாப்பிடுவது உடலுக்கு நல்ல பலன்களை கொடுக்கும். பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகளில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. பச்சை காய்கறிகளில் சிறிது எலுமிச்சை சாறு, ஆலிவ் எண்ணெய் சேர்த்து சாப்பிட உங்களுக்கு புத்துணர்ச்சி மற்றும் ஆரோக்கியம் கிடைக்கிறது.
கொண்டைக்கடலை சாலட், இது கலோரிகள் குறைவாக உள்ள சாலட். இது புரதச்சத்து நிறைந்துள்ளது. கொண்டைக்கடலை, வெள்ளரி, வெங்காயம், எலுமிச்சை சாறு, உப்பு, மிளகு சேர்த்து சாப்பிட சுவையும் அள்ளும், உடலுக்கு ஆரோக்கியமும் பெருகும்.
லீஃபி சாலட், காளான், ராக்கெட்/அருகுலா இலைகள், தேன் தடவிய ஆலிவ், உப்பு, மிளகு ஆகியவற்றை சேர்த்து செய்யும் சாலட் உங்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்குகிறது. இது நார்ச்சத்து நிறைந்துள்ளது. உடலில் உள்ள குளுகோஸ் அளவை கட்டுப்படுத்த இந்த சாலட் உதவுகிறது.
டோஃபூ சாலட், புதிய டோஃபூ, குடை மிளகாய், வெள்ளரி, கீரைகள் சேர்த்து செய்யப்படும் சாலட், கொழுப்புச்சத்து அறவே இல்லாதது. கலோரிகள் குறைந்தது. புரதச்சத்து நிறைந்து. கால்சியம் நிறைந்தது.
கீரை சாலட், பாலக்கீரை சாலட் சத்துக்கள் நிறைந்தது. இது மன அழுத்தம் குறைய உதவும். இது கண் ஆரோக்கியத்துக்கு சிறந்தது. இதய நோய் மற்றும் கேன்சர் வராமல் தடுக்கிறது. இந்த சாலட்களை சாப்பிட்டு உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.
பீட்ரூட் சாலட், இந்த சாலட் ரத்தத்துக்கு நல்லது, அதை சுத்திகரித்து ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. பீட்ரூட், அருகுலா இலைகள், பன்னீர், சீஸ், வினிகர், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து செய்வது இந்த சாலட். இது உடலுக்கு ஆற்றல் மற்றும் ஆரோக்கியம் கொடுக்கும்