தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் சர்க்கரை பொங்கல்.. நீங்களும் ஈசியா செய்யலாம் பாருங்க!
Canva
By Pandeeswari Gurusamy
Apr 14, 2025
Hindustan Times
Tamil
தேவையான பொருட்கள்: பச்சை அரிசி 1 கப், பாசி பருப்பு 1/2 கப், நெய் 1/4 கப், வெல்லம் 1/2 கிலோ, முந்திரி 10, ஏலக்காய் 4, உப்பு சிறிது
முதலில் அரிசி மற்றும் பாசிப்பருப்பை கழுவி எடுத்து கொள்ள வேண்டும். பச்சரிசி மற்றும் பருப்பை குறைந்தது 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்
பின்னர் வெல்லத்தை பாகு காய்ச்சி எடுக்க வேண்டும். இந்த பாகை ஆற வைத்து வடி கட்டு கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் அரிசி,பருப்பை உப்பு சேர்த்து வேக வைக்கவும். நீங்கள் குக்கரிலும் வைத்து 5 விசில் விட்டு எடுத்து கொள்ளலாம்.
சாதம் கொதித்து வந்தவுடன் அதனுடன் வெல்ல பாகு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்
பின்னர் அதில், ஏலக்காய், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து நன்கு கிளறி நெய் விட்டு இறக்கவும்
கர்ப்பிணிகள் பீன்ஸ் சாப்பிடலாமா? பயன்கள் யாவை என இங்கு தெரிந்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு மிகவும் உதவியானதாக இருக்கும்.
க்ளிக் செய்யவும்