மேஷம் முதல் மீனம் வரை! ராஜவாக வாழ வைக்கும் சதுர்சாகர யோகம் யாருக்கு? ஜோதிடம் சொல்லும் ரகசியம்!

By Kathiravan V
Jul 11, 2024

Hindustan Times
Tamil

ஜோதிடத்தில் யோகம் என்ற சொல்லு சேர்க்கை என்று பொருள்படுகிறது. ஒருவருடைய ஜாதகத்தில் கிரகங்களின் நகர்வு, பார்வை, ஆட்சி, உச்சம், நீசம் உள்ளிட்டவைகளை வைத்து பல்வேறு யோகங்கள் ஏற்படுகின்றன. அந்த வகையில் பிரம்மனுக்கு நிகரான புகழை தரும் யோகமாக சதுர்சாகர யோகம் விளங்குகின்றது.

சகலத்தையும் பெற்றுத் தரும் யோகங்களில் ஒன்றான சதுர்சாகர யோகமானது ஜாதகரை தனவனாகவும், கல்விமான் ஆகவும், நீண்ட ஆயுள் கொண்டவராக மாற்றும்.

சதுர் என்றால் 4 என்று பொருள், உங்கள் லக்னத்தில் இருந்து 4 கேந்திரங்களிலும் கிரகங்கள் இருக்கும் போது இந்த சதுர்சாகர யோகம் உண்டாவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகின்றது. மேலும் இந்த 4 கேந்திரங்களிலேயே எல்லா கிரங்களிலும் இருக்கும் போது மாபெரும் யோகத்தை அளிக்கும்.

உதாரணமாக லக்னம் எனும் ஒன்றாம் வீடு, 4ஆம் இடம் எனும் சுக ஸ்தானம், 7ஆம் இடம் எனும் சப்தம ஸ்தானம், 10ஆம் இடம் எனும் கர்ம ஸ்தானங்களில் எல்லா கிரகங்களும் இருக்க வேண்டும்.

மேஷம் முதல் மீனம் வரை! ராஜவாக வாழ வைக்கும் சதுர்சாகர யோகம் யாருக்கு? ஜோதிடம் சொல்லும் ரகசியம்!

இந்த யோகம் பெற்றவர்கள் புகழ், கௌரவம், அந்தஸ்து, நீண்ட ஆயுள், திடகாத்திரமான் உடல் உள்ளிட்டவை அந்தந்த நேரத்தில் கிடைக்கப்பெரும். அரசனின் பொக்கிஷத்திற்கு காவலாளியாக இருக்கும் நிலை இந்த ஜாதகருக்கு ஏற்படும். அன்னிய தேசத்தில் நிரந்தர வாசம் செய்யக்கூடிய தன்மை இந்த ஜாதகருக்கு இருக்கும்.

வெளிநாடு சென்று புகழை ஈட்டும் தன்மையை இந்த யோகக்காரர்கள் பெருவார்கள். சதுர்சாகர யோகத்தில் பல வகைகள் உண்டு.

சர லக்னம் என்று சொல்லக்கூடிய மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய 4 லக்னங்களில் பிறந்து, சதுர்கேந்திரங்கள் வலுப்பெற்றால் முதல் தர சதுர்சாகர யோகம் உண்டாகும். 

ஸ்திர லக்னம் என்று சொல்லக் கூடிய ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய லக்னங்களில் பிறந்து, கேந்திரங்கள் வலுப்பெற்றால் 75 சதவீதம் வரை பலன்கள் கிடைக்கும்.

ஜனவரி 24ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான தினசரி பலன்கள் இதோ..