தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய் வருகிற ஜூன் 22ம் தேதி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து அவரது அப்பாவான எஸ்.ஏ. சந்திரசேகரும், அம்மா ஷோபாவும் பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பேட்டியளித்தனர். அப்போது விஜய்க்கும் அவரது தங்கை வித்யாவிற்கும் இடையே இருந்த பிணைப்பு குறித்து பேசினர். 

By Kalyani Pandiyan S
Jun 22, 2024

Hindustan Times
Tamil

நான் அப்போது அசிஸ்டண்ட் டைரக்டர், ஷோபா மேடைப் பாடகி. எங்களுடைய வாழ்க்கை அன்று அப்படித்தான் இருந்தது. எக்மோர் அரசு மருத்துவமனையில்தான் விஜய் பிறந்தார். அவர் பிறக்கும் போது, அவர் இவ்வளவு அதிஷ்டமான குழந்தையாக இருப்பார் என்று நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. அவருக்கும் அவரது தங்கைக்குமான உறவு அப்படி இருந்தது. பள்ளி முடித்துவிட்டு வீட்டிற்கு வரும் விஜய், அழுக்குத்துணி வைக்கும் கூடையில் வித்யாவை தூக்கி வைத்து விளையாடுவார். நாங்கள் கீழே விழுந்து விடுவாள் என்று பதறுவோம். ஒரு முறை கீழே கூட விழுந்தது என்று நினைக்கிறேன்.

Enter text Here

அப்போது கூட அவளுக்கு ஒன்றும் ஆகவில்லை. விஜய் போன்ற குழந்தையை எனக்கு கொடுத்த இறைவனுக்கு நன்றி. விஜயை நினைத்து, நினைத்து தினம் தினம் பெருமை படுகிறோம். 1991ம் ஆண்டு, அவர் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று சொன்னார். ஆனால் நான் வேறு விதமாக நினைத்திருந்தேன். ஆம் , நான் விஜயை ஒரு டாக்டராக மாற்ற வேண்டும் என்று நினைத்தேன். காரணம் என்னவென்றால், விஜயின் தங்கை வித்யா லுகேமியாவால் இறந்தாள். 

ஆகையால் அதில், விஜயை சிறப்பு வாய்ந்த டாக்டராக மாற்றி, பெரிய மருத்துவமனை கட்ட வேண்டும் என்று நினைத்தேன். காரணம், வித்யா எங்களை விட்டுச் சென்ற போது அவளுக்கு வெறும் 3 1/2 வயது. 

Enter text Here

அந்த மாதிரியான இழப்பு யாருக்கும் வந்து விடக்கூடாது என்றுதான் அப்படி நினைத்தேன். ஆனால் விஜய் நான் நடித்தே தீருவேன் என்று பிடிவாதமாக நின்றார். ஒரு முறை முடிவெடுத்துவிட்டால், தன்னுடைய பேச்சை தானே கேட்கமாட்டேன் என்று அவர் கூறுவது, அன்றே அவருக்கு இருந்த பிடிவாத குணமாகும்.”  என்று பேசினார். 

உடல் பருமன் இன்று அனைவரின் தலையாய பிரச்னை