பனிக்காலம் இன்னும் முழுவதுமாக முடியாததால் ஜலதோஷம், மூக்கடைப்பு, சளித்தொல்லை, தொண்டை கரகரப்பு போன்ற உடல் உபாதைகள் ஏற்படுவது இயல்புதான்

By Pandeeswari Gurusamy
Jan 15, 2024

Hindustan Times
Tamil

உரிய மருத்துவ ஆலோசனைகளை பெற்று அதை கடைபிடித்தாலும், வீட்டில் இருந்தபடியே சளித்தொல்லையில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்

மூலிகைகளை சேர்த்து டீ தயார் செய்து அவ்வப்போது பருக வேண்டும். மூலிகை தேநீரில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் பண்புகள் இயல்பாகவே இருப்பதால் உடலில் ஏற்படும் அழற்சிக்கு எதிராக போராடுகிறது. இவை மூக்கு பகுதியை ஆற்றுப்படுத்தவும் செய்கிறது.

பாத்திரத்தில் நீர் ஊற்றி அதை நன்கு சூடாக்க வேண்டும். போதிய அளவில் சூடான பிறகு சுடு நீரிலிருந்து வெளியேறும் ஆவியை மூக்கின் வழியே மெதுவாக இழுக்க வேண்டும். நீர் இருக்கும் பாத்திரத்திலிருந்து சில இன்ச் தூரம் முகத்தை தள்ளி வைத்து ஆவி பிடிக்க வேண்டும்.

பாத்திரத்தில் நீர் ஊற்றி அதை நன்கு சூடாக்க வேண்டும். போதிய அளவில் சூடான பிறகு சுடு நீரிலிருந்து வெளியேறும் ஆவியை மூக்கின் வழியே மெதுவாக இழுக்க வேண்டும். நீர் இருக்கும் பாத்திரத்திலிருந்து சில இன்ச் தூரம் முகத்தை தள்ளி வைத்து ஆவி பிடித்தல் வேண்டும்.

மூக்கிலிருந்து சளி வருவதை தவிர்க்க ஹாட் பேக் அல்லது துணியை வைத்து ஒத்தடம் கொடுக்கலாம்.

மென்மையான துணியை வெதுவெதுப்பான நீரில் நனையவைத்து நன்றாக நீரை பிழிந்து மூக்கின் மேல் பகுதியில் ஒத்தடம் செய்ய வேண்டும். 

துணியில் இருக்கும் வெப்பம் மூக்கின் துவாரங்களை திறக்க உதவுவதுடன், ஈரப்பதம் எரிச்சலை ஏற்படுத்தும் திசுக்களை ஆற்றுப்படுத்தும்.

வறண்ட காற்றை ஈரமாக்கும் வேலையை ஈரப்பதமூட்டிகள் செய்கின்றன. இவை நீரை நீராவியாக மாற்றுகின்றன. இந்த ஈரப்பதம் சளியால் ஏற்படும் எரிச்சலை போக்க உதவுகிறது.

முள்ளங்கி ஜூஸ் பயன்கள் பற்றி பார்ப்போம்