பிரபல நடிகரான ராம்சரணின் ஒர்க் அவுட் மற்றும் டயட் சார்ந்த  விபரங்களை இங்கே பார்க்கலாம்.  

By Kalyani Pandiyan S
Apr 09, 2024

Hindustan Times
Tamil

கார்டியோ, ஃபங்ஷனல் ட்ரெயினிங், வெயிட் ட்ரெயினிங் உள்ளிட்ட பயிற்சிகளை கலந்து செய்கிறார். 

இந்த பயிற்சிகளுக்குள் பாக்ஸிங், ரன்னிங், சைக்கிளிங், ஸ்ம்மிங் உள்ளிட்ட பயிற்சிகளும் அடங்கும். 

தினமும் 2 மணி நேரம் வொர்க் அவுட் என்பதில் ராம்சரண் மிக கறாராம். வாரத்தில் 6 நாட்கள் இது போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளும் ராம்சரண், ஞாயிற்றுக்கிழமையில் தனக்கு பிடித்தமான உணவுகளை சாப்பிட்டுக்கொண்டு ஜாலியாக இருப்பாராம். 

திங்கள் கிழமை மார்பக சம்பந்தமான பயிற்சிகளை மேற்கொள்ளும் ராம் சரண், செவ்வாய் கிழமையில் தோள் பட்டை சார்ந்த பயிற்சிகளை மேற்கொள்கிறார். 

முட்டை, முட்டையின் வெள்ளைக்கரு, பாதாம் பால், ஓட்ஸ் உள்ளிட்ட உணவுகளை காலை வேளையில் எடுத்துக்கொள்கிறார். மதிய வேளையில் கோழி இறைச்சி, காய்கறிகள் அடங்கிய கிரேவி, சிவப்பு அரிசி சாப்பாடு உள்ளிட்டவற்றை எடுத்துக்கொள்கிறார்.  மாலை வேளையில் ஒரு கப் நட்ஸ், வெஜிடபுள் சாலட், அவகேடா ஜூஸ் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொள்கிறார். 

உருளைக்கிழங்கின் நன்மைகள்