ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் 2025 இன் 28வது போட்டியின் போது நட்சத்திர இந்திய மற்றும் ஆர்சிபி பேட்ஸ்மேன் விராட் கோலி புதிய சாதனை படைத்தார்.

By Manigandan K T
Apr 14, 2025

Hindustan Times
Tamil

போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்த கோலி 39 பந்துகளில் ஒரு அற்புதமான அரைசதம் அடித்து தனது 100வது டி20 அரைசதத்தைப் பதிவு செய்தார்.

ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னருக்கு (108 அரைசதங்கள்) பிறகு டி20 அரைசதங்களில் 100 எடுத்த  இரண்டாவது வீரர் மற்றும் அவ்வாறு செய்த முதல் இந்தியர் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார்.

ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக கோலியின் அரை சதம் ஐபிஎல்லில் அவரது 66 வது 50-க்கும் மேற்பட்ட ஸ்கோராக இருந்தது. இதன்மூலம் வார்னரின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார். வார்னர் 66 முறை ஐபிஎல் இல் 50+ ஸ்கோர் பதிவு செய்திருக்கிறார். 

மேலும் ஐபிஎல் வரலாற்றில் 8 முறை சென்சுரி பதிவு செய்திருக்கிறார் விராட் கோலி. நேற்றைய மேட்ச்சில் 45 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரி உள்பட 62 ரன்கள் விளாசினார் கோலி. கடைசி வரை நாட் அவுட் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருடன் ஓபனிங் பேட்ஸ்மேனாக களம் புகுந்த பிலிப் சால்ட் 33 பந்துகளில் 65 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அவரே ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

பின்னர் கோலியுடன் ஜோடி சேர்ந்த தேவ்தத் படிக்கல் 28 பந்துகளில் 40 ரன்கள் விளாசி அசத்தினார். இந்த ஜோடி அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தது. இவ்வாறாக 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை ருசித்தது ஆர்சிபி.

ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் ஆர்சிபி அணி 3வது இடத்தில் இருக்கிறது. இதுவரை 6 மேட்ச்களில் விளையாடி 4இல் வெற்றியும் 2 இல் தோல்வியும் பெற்று 8 புள்ளிகளுடன் உள்ளது.

வீட்டுக்குள்ளேயே ஏசியை ஆன் செய்துவிட்டு குளிர்ச்சியான சூழலில் இருப்பதை அனைத்து வயதினரும் விரும்புகிறார்கள். ஆனால் நீண்ட நேர ஏசியில் இருப்பது சில உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும்