மறைந்த மனோஜ் பாரதியின் மறக்க முடியாத வாழ்க்கை பயணம்
By Stalin Navaneethakrishnan Mar 25, 2025
Hindustan Times Tamil
தமிழ் சினிமாவின் முதன்மை இயக்குனரின் மகன் என்கிற பெயர் இருந்தும், சினிமாவில் மனோஜ் ஜொலிக்க முடியவில்லை
தன் தந்தையின் இயக்கத்தில் தாஜ்மஹால் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார் மனோஜ் பாரதி
Pixabay
சரண் இயக்கத்தில் அல்லி அர்ஜூனா படத்தில் நடித்தார்
Pixabay
சினிமாவில் சராசரி இடத்தை கூட பிடிக்க முடியாமல், கடுமையாக போராடினார்
இதற்கிடையில் கேரள பெண்ணை காதலித்து திருமணம் செய்ததால், அவருடைய தந்தையின் எதிர்ப்பை சந்தித்தார்
பிந்நாளில் அவரது காதல் திருமணம், குடும்பத்தாரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
நினைத்த வாழ்க்கை அமைந்தாலும், தொழில் வெற்றிக்கு தொடர்ந்து போராடிக் கொண்டிருந்தார்
மனைவி, இரு மகள்கள் என இனிமையான வாழ்க்கையை வாழ்ந்தாலும், சினிமாவை தவிர வேறு தொழிலை அவர் நாடவில்லை
உதவி இயக்குனர், இயக்குனர் என சினிமாவைச் சுற்றியே அவரது வாழ்க்கை வலம் வந்தது
சமீபத்தில் அவர் இயக்கிய திரைப்படம் பேசப்பட்டாலும், வெற்றியை பெறவில்லை. கடைசி வரை வெற்றியை நோக்கி ஓடிய மனோஜ், மாரடைப்பால் தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டார்
ஆரோக்கியமான செரிமானத்திற்கு இந்த 9 காலை பழக்கங்களைப் பின்பற்றுங்கள்.