‘பாக்கியலட்சுமி’, ‘கார்த்திகை தீபம்’ உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி மகளிர் தினத்தையொட்டி வசந்த் & கோ மற்றும் பஜாஜ் நிறுவனங்கள் இணைந்து சென்னையில் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.

By Kalyani Pandiyan S
Mar 13, 2025

Hindustan Times
Tamil

அங்கு ரேஷ்மாவுடன் பிரத்யேகமாக உடையாடும் வாய்ப்பும் நமக்கு கிடைத்தது. 

ஆன்லைன் டாக்சிக்கை எப்படி சமாளிக்கிறீர்கள் என்பது குறித்து கேட்டேன். 

அதற்கு பதிலளித்த அவர், ‘எந்த ஒரு நெகட்டிவான விஷயத்தையும் நம்மள பாதிக்க வைக்க விட கூடாது; அதுக்கு நம்ம எனர்ஜி கொடுக்க, கொடுக்க அது உங்க வாழ்கையில முக்கியமான விஷயமா மாறிக்கிட்டே இருக்கும். அதுக்கு இடம் கொடுக்கக்கூடாது.

நமக்கு எது தேவையோ, அதுக்கு மட்டும் எனர்ஜி கொடுத்தாதான் நாம நிம்மதியா இருக்க முடியும். 

என்ன சுத்தி இருக்குற மக்கள் எனக்கு எப்போதுமே சப்போர்ட்டிவா இருக்காங்க..

அவங்கள தவிர வெளிய இருக்குறவங்க என்ன பத்தி என்ன பேசுறாங்க அப்படிங்கிறது எனக்குத் தேவையில்லாத ஒன்னு’ என்று பதிலளித்தார்.

இரவில் பல் துலக்காவிட்டால் இதய பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது உங்களுக்குத் தெரியுமா? இதற்கான சாத்தியக் கூறுகள் என்னென்ன என இங்குப் பார்ப்போம்.