‘பாக்கியலட்சுமி’, ‘கார்த்திகை தீபம்’ உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி மகளிர் தினத்தையொட்டி தனியார் நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்தார். 

By Kalyani Pandiyan S
Mar 12, 2025

Hindustan Times
Tamil

அவருடன் உரையாடியதிலிருந்து..  ‘ நிறைய கேரக்டர்கள் இருக்கு.. நடிகையாக நிறைய கேரக்டர்கள்ல நடிக்கத்தானே இங்க வந்துருக்கோம். ஆனா, வாய்ப்புகள்தான் கிடைக்க மாட்டுக்குது. கிடைச்சா நல்லா இருக்கும்.

வெள்ளித்திரையில எல்லோருக்கும் நடிக்கணும்னு ஆசைதான். ஆனா, ஒரு கேரக்டர்ல நடிச்சா, அதே மாதிரியான கேரக்டர்கள்லயே நடிக்க கூப்ட்றாங்க.. 

அத ஒப்பிடும் போது சின்னத்திரையில வித வித ரொல்கள்ல நடிக்க வாய்ப்பு கிடைக்கும். அதனால, நான் சின்னத்திரைக்கு நன்றிக்கடன் பட்டுருக்கேன்.

நெகட்டிவான கமெண்டுகள் பற்றி பேசும் போது, ‘ எந்த ஒரு நெகட்டிவான விஷயத்தையும் நம்மள பாதிக்க வைக்க விட கூடாது; அதுக்கு நம்ம எனர்ஜி கொடுக்க, கொடுக்க அது உங்க வாழ்கையில முக்கியமான விஷயமா மாறிக்கிட்டே இருக்கும். அதுக்கு இடம் கொடுக்கக்கூடாது.

நமக்கு எது தேவையோ, அதுக்கு மட்டும் எனர்ஜி கொடுத்தாதான் நாம நிம்மதியா இருக்க முடியும். என்ன சுத்தி இருக்குற மக்கள் எனக்கு எப்போதுமே சப்போர்ட்டிவா இருக்காங்க..

அவங்கள தவிர வெளிய இருக்குறவங்க என்ன பத்தி என்ன பேசுறாங்க அப்படிங்கிறது எனக்குத் தேவையில்லாத ஒன்னு

தோலுக்கும், உடம்புக்கும் ரொம்ப அக்கறை எடுத்துக்குறேன். இப்ப தியானத்தையும் ஆரம்பிச்சிருக்கேன். அது பெரிய கோலா இருக்கு... நிம்மதியா வாழணும்.. அவ்வளவுதான்’ என்று பேசி விடைபெற்றார்.

பால் இல்லாமலே எலும்புகளை வலுவாக்கணுமா? கால்சியம் சத்து நிறைந்த இந்த உணவுகளை ட்ரை பண்ணுங்க!