குட் பேட் அக்லி படம் இன்று வெளியான நிலையில், நடிகர் அஜித் தன்னுடைய கார் ரேஸ் தொடர்பான பணிகளில் மும்மரமாக ஈடுபட்டார்.

By Kalyani Pandiyan S
Apr 10, 2025

Hindustan Times
Tamil

படம் வெளியான இன்றைய தினம் அஜித் ரிலாக்ஸ் செய்வார் என்று எதிர்பார்த்தால் அவர் ரேசிங்கில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறாரே என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். 

ரிலாக்ஸ் என்பது இன்னொரு வேலைதான் என்ற கேப்ஷனோடு புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன 

அஜித் தன்னுடைய பெயரில் கார் ரேஸிங் குழுவை உருவாக்கி இருக்கிறார். 

குட் பேட் அக்லி படமானது கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. 

குடும்பத்திற்காக தன்னுடைய கேங்கஸ்டர் தொழிலை விட முடிவு செய்யும் ஏகே, செய்த தவறுகளுக்காக ஜெயிலுக்கு சென்று தண்டனை அனுபவித்து கொண்டு இருக்கிறார். 

 விஹான் கேட்கும் போதெல்லாம் அப்பா பெரிய பிசினஸ் மேன்.. அதனால் நினைத்த போதெல்லாம் அவரால் வரமுடியாது என்று சொல்லி சமாளிக்கின்றனர்.

ஒரு கட்டத்தில் மகனுக்காக ஏகே வெளியே வருகிறார். அந்த சமயத்தில் ஸ்பெயினில் இருக்கும் ஒரு கும்பல் விஹானை போதை பொருள் வழக்கில் சிக்க வைக்கிறது. 

விஹானை அதில் சிக்க வைத்தது யார்? அதற்கான காரணம் என்ன? ஒரு தந்தையாக விஹானை அந்த கும்பலிடம் இருந்து மீட்க ஏகே எடுத்த ரிவெஞ்ச் என்ன? உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்கள்தான் குட் பேட் அக்லி படத்தின் கதை!

பால் இல்லாமலே எலும்புகளை வலுவாக்கணுமா? கால்சியம் சத்து நிறைந்த இந்த உணவுகளை ட்ரை பண்ணுங்க!