’மேஷம் முதல் மீனம் வரை!’மறுபிறவி யாருக்கு கிடையாது? ஜோதிடம் சொல்லும் ரகசியம்!

By Kathiravan V
Nov 20, 2023

Hindustan Times
Tamil

மறுபிறவி எடுக்காமல் இருப்பது மிகவும் பாக்கியமாகும்; எல்லோருக்கும் அந்த பாக்கியம் அமையாது என்கிறார் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன் 

பற்றற்ற வாழ்வு வாழ்வோருக்கும், ஆசைகளை துறந்தோருக்கும்,துறவிகளுக்கும் அந்த பாக்கியம் கிடைக்கிறது.

ஒருவருடைய ஜனன ஜாதகத்தில் 12ஆம் இடம் மோட்ச ஸ்தானம் ஆகும். அதேபோல் நவகிரகங்களில் கேது மோட்சக்காரகன்; 12ஆம் இடத்தில் கேது இருந்து, அந்த அதிபதி சிறப்பாக அமைத்திருக்கவேண்டும்.

லக்னத்தில் சுபகிரகங்கள் இருக்க வேண்டும் அல்லது லக்னத்தை சுப கிரகங்கள் பார்க்க வேண்டும். 

அடுத்ததாக, 12ஆம் இடத்தில் கேது அமர்ந்து, 12ஆம் இடத்திற்குரிய கிரகம் நல்ல நிலையில் (பாவ கிரகங்கள் சேர்க்கை பெறாமல்) இருக்க வேண்டும். 

குறிப்பாக சனியின் சேர்க்கை, சனியின் பார்வை இல்லாமல் இருக்க வேண்டும்.

ஒருவர் ஜாதகத்தில் 12ஆம் இடத்தில் கேது இருந்தாலும், அந்த 12ஆம் இடத்தை சனி பார்த்து விட்டால் உடனடியாக மறுபிறவி உண்டு என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன. அதனால் 12ல் கேது இருந்து விட்டால் மறுபிறவி கிடையாது எனக் கூறி விட முடியாது.

லக்னத்தையோ அல்லது லக்னாதிபதியையோ குரு பார்த்திட, 12ஆம் இடத்தில் கேது அமர்ந்து, 12க்கு உரிய கிரகமும் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே அவர்கள் பிறவா நிலையை அடைவர்.

குட் நியூஸ் சொன்ன ரெடின் கிங்ஸ்லி- சங்கீதா