புவிசார் குறியீடு பெற்ற 8 தமிழக பொருட்கள்

1. கும்பகோணம் கொழுந்து வெற்றிலைக்கு புவிசார் குறியீடு கிடைக்கப் பெற்றுள்ளது மிகச் சிறந்த அங்கீகாரம் ஆகும்.

pixabay

By Manigandan K T
Apr 17, 2025

Hindustan Times
Tamil

2. கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையில் தயாரிக்கப்படும் மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது

pixabay

3. எல்லோரும் நன்கு அறிந்த பண்ரூட்டி பலாப்பழத்துக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. பண்ரூட்டி வழியாக சென்றால் பலாப்பழ வியாபாரிகளை நாம் பார்த்திருப்போம். தித்திக்கும் பலாப்பழம் இது ஆகும்.

pixabay

4.பண்ரூட்டி பலாப்பழத்துக்கு மட்டுமல்ல, முந்திரிக்கும் புவிசார் குறியீடு கிடைத்திருக்கிறது. இந்தப் பகுதியில் உள்ள தட்ப வெப்பநிலை பலாவுக்கும் முந்திரிக்கும் உகந்ததாக உள்ளது.

pixabay

5. தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியங்குடி எலுமிச்சை சாகுபடிக்கு பெயர் பெற்றது. இங்கு விளையும் எலுமிச்சையின் சுவை அலாதியானது. இதற்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

pixabay

6. விருதுநகர் சம்பா வத்தல் சமையலுக்கு சிறந்த சுவையைத் தரவல்லது. இதன் காரம் தனித்தன்மை வாய்ந்தது. இதற்கும் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

pixabay

7. பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளம் பகுதியில் விளைகிற சின்ன வெங்காயத்துக்கும் இந்தக் குறியீடு கிடைத்துள்ளது. இது அதிக காரத்தன்மை கொண்டதாகும். 

pixabay

8.ராமநாதபுரம் மாவட்டத்தின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் சித்திரைக்கார் அரிசியும் இந்தக் குறியீட்டை பெற்றுள்ளது. இது ஊட்டச்சத்து நிறைந்த அரிசி ஆகும்.

pixabay

கவனம் மக்களே.. சூரியன் ரிஷப ராசியில் சஞ்சரிப்பதால் எந்த 3 ராசிகளுக்கு பாதகம்!