நாய்கள் ஏன் புல்லை சாப்பிடுகின்றன? ஆச்சரியப்பட வைக்கும் காரணங்கள்

Photo Credit: Pexels

By Marimuthu M
Feb 01, 2025

Hindustan Times
Tamil

நீங்கள் வளர்த்த நாய் பெரும்பாலும் புல் சாப்பிடுவதை கவனித்திருக்கலாம். நாய்கள் ஏன் புல்லை சாப்பிடுகின்றன? இந்த நடைமுறைக்கு பல காரணங்கள் உள்ளன.

Photo Credit: Pexels

சில நாய்கள் புல்லின் சுவையை ரசிக்கின்றன. இதனால், அவை புல் உண்ணும் பழக்கத்தை வளர்த்துக் கொள்கின்றன. 

Photo Credit: Pexels

நாய்களுக்குத் தேவையான நார்ச்சத்து, வைட்டமின்கள் போன்றவை அதில் இருப்பதால் புல்லை அவை உண்ணலாம். 

Photo Credit: Pexels

புல் சாப்பிடுவது செரிமானத்திற்கு உதவுகிறது. அதனால் நாய் அதனை விரும்புகிறது

Photo Credit: Pexels

சில நேரங்களில் நாய்கள் புல் சாப்பிட்ட பிறகு வாந்தி எடுக்கும். இருப்பினும், பெரும்பாலான நாய்கள் நோய்வாய்ப்படுவதில்லை.

Photo Credit: Pexels

நாய்கள் சில நேரங்களில் சலிப்படைகின்றன. இப்படி சலிப்படைந்தாலும் நாய்கள் புல்லைத் தின்கின்றன.

Photo Credit: Pexels

கவலை அல்லது மன அழுத்தம் உள்ள நாய்கள் தங்கள் உணர்ச்சிகளைச் சமாளிக்க புல் சாப்பிடுவதாகக் கூறப்படுகிறது.

Photo Credit: Pexels

நாய்கள் புல்லைத் தின்பதால் பிரச்னை இல்லை. ஆனால், பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தும் புற்கள் அல்லது தீங்கு விளைவிக்கும் தாவரங்களை உண்டால் பிரச்னை ஆகிவிடும் என்று கூறப்படுகிறது.

Photo Credit: Pexels

வெறும் வயிற்றில் பச்சை முட்டை சாப்பிடக் கூடாதா? சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்பு என்ன? அதை எப்படி எடுத்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது!

Pixabay